Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/இன்று விண்ணில் பாய்கிறது"பி.எஸ்.எல்.வி., சி18'

இன்று விண்ணில் பாய்கிறது"பி.எஸ்.எல்.வி., சி18'

இன்று விண்ணில் பாய்கிறது"பி.எஸ்.எல்.வி., சி18'

இன்று விண்ணில் பாய்கிறது"பி.எஸ்.எல்.வி., சி18'

ADDED : அக் 11, 2011 11:40 PM


Google News
சென்னை:'பி.எஸ்.எல்.வி., சி18' ராக்கெட், 'மெகா ட்ராபிக்ஸ்' உட்பட நான்கு செயற்கைக்கோள்களுடன், இன்று காலை 11 மணிக்கு, விண்ணில் ஏவப்படுகிறது.இந்தியா - பிரான்ஸ் கூட்டுத் தயாரிப்பில், உலகின் வெப்ப மண்டல பகுதியில் நிலவும் வானிலை மற்றும் சீதோஷ்ண நிலையையும் அறிய, 'மெகா ட்ராபிக்ஸ்' என்ற அதிநவீன செயற்கைக்கோளை, இஸ்ரோ தயாரித்துள்ளது.இந்த புதிய செயற்கைக்கோளுடன், 'எஸ்.ஆர்.எம்., சாட், ஜுக்னு, வெசல் சாட்' உட்பட நான்கு செயற்கைக்கோள்கள், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் (இஸ்ரோ) இருந்து, இன்று காலை 11 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகின்றன.

'மெகா ட்ராபிக்ஸ்' செயற்கைக்கோள், இந்தியாவின் பருவநிலை மற்றும் சூறாவளி, வெள்ளம், வறட்சி ஆகியவற்றை அறிய உதவும். இந்த நான்கு செயற்கைக்கோள்களையும்,'பி.எஸ்.எல்.வி., சி18' ராக்கெட் சுமந்து செல்கிறது.'பி.எஸ்.எல்.வி., சி18' ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான, 50 மணி நேர, 'கவுன்ட் டவுண்' திங்கள்கிழமை காலை 9 மணிக்கு துவங்கியது. இதையடுத்து, ராக்கெட்டில் திரவ எரிபொருள் நிரப்புவதில், இரண்டாவது கட்டப்பணி, ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான, நான்காவது கட்டப்பணி உட்பட, பல்வேறு பரிசோதனைப் பணிகள் நடந்து வந்தன.இதைதொடர்ந்து, ஏற்கனவே திட்டமிட்டபடி, இன்று காலை 11 மணிக்கு நான்கு செயற்கைக்கோள்களுடன், பி.எஸ்.எல்.வி., சி18 ராக்கெட், விண்ணில் ஏவப்படுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us