ADDED : அக் 13, 2011 05:24 AM
தூத்துக்குடி: தூத்துக்குடியில் இளம் பெண்ணிடம் கவரிங் நகைபறித்த 3 பெண்களை
போலீசார் கைது செய்தனர்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது,
தூத்துக்குடி கேவிகே.
நகரைச் சேர்ந்தவர் முத்துராஜ் மனைவி அம்மு (35). இவர்
தூத்துக்குடி டூவிபுரம் 5வது தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்குநின்ற 3 பெண்கள் அவர் கழுத்தில் கிடந்த நகையை பறித்து
சென்றனர். இதுகுறித்து புகாரின்பேரில் மத்திய பாகம் போலீசார் வழக்குப்பதிவு
செய்தனர். மதுரை பகுதியைச் சேர்ந்த கவிதா (35), மணிமாலா (30), பாண்டி
மீனால் (55) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து நகை பறிமுதல்
செய்யப்பட்டது. ஏற்கனவே அவர்களிடமிருந்த செல்போன், ரொக்கபணம் ஆயிரத்து 200
ரூபாயும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். பறிமுதல் செய்யப்பட்ட நகை
கவரிங் நகை என்பது விசாரணையில் தெரியவந்தது.பெண்ணிடம் நகை பறித்த சம்பவம்
அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


