Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/பாதாள சாக்கடை திட்டம்

பாதாள சாக்கடை திட்டம்

பாதாள சாக்கடை திட்டம்

பாதாள சாக்கடை திட்டம்

ADDED : அக் 11, 2011 01:37 AM


Google News
வேடசந்தூர் : ''பாதாள சாக்கடை திட்டத்தை துரிதமாக செயல்படுத்தி, பேரூராட்சியில் ஊழலற்ற நிர்வாகம் செயல்படுத்துவேன்,'' என, வேடசந்தூர் பேரூராட்சி தலைவர் பதவி தி.மு.க., வேட்பாளர் வி.

கார்த்திகேயன் கூறினார். அவர் பேசியது: அனைத்து வார்டுகளிலும் சாலை, சுகாதாரமான கழிப்பறை, தெரு விளக்கு வசதி செய்து தரப்படும். சுற்றுப்புற சூழலை பாதுகாக்கவும், குடகனாற்றில் கலக்கும் கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு காண பாதாள சாக்கடை திட்டம் துரிதமாக செயல்படுத்த நடவடிக்கை எடுப்பேன். சுத்தமான குடிநீர் வழங்க, நீர் ஆதாரங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதோடு, காவிரி கூட்டு குடிநீர் திட்டம் விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். நவீன சலவைக்கூடம் கட்டி தரப்படும். வெளியூர் பஸ்கள் அனைத்தும் பஸ் ஸ்டா ண்ட் வந்து செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அடித்தட்டு மக்கள் மேம்பாட்டிற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். பேரூராட்சி சார்பில் மூன்று மாதத்திற்கு ஒரு முறை, இலவச மருத்துவ முகாம் நடத்தப்படும். வாரச் சந்தையில்அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்து, பேரூராட்சி வருமானத்தை பெருக்க முயற்சி எடுப்பேன். எந்த நேரமும் எளிதில் என்னை அணுகலாம், என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us