மகாராஷ்டிராவில் இரு கட்டமாக நடக்கிறது அத்வானி ரதயாத்திரை
மகாராஷ்டிராவில் இரு கட்டமாக நடக்கிறது அத்வானி ரதயாத்திரை
மகாராஷ்டிராவில் இரு கட்டமாக நடக்கிறது அத்வானி ரதயாத்திரை
ADDED : அக் 14, 2011 10:56 PM

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, தன் ரத யாத்திரையை வரும், 17, 18 மற்றும் நவம்பர் 2 முதல் 5ம் தேதி என, இரு பகுதியாக மேற்கொள்ள உள்ளார்.
பா. ஜ., மூத்த தலைவர் அத்வானி, தன் ரத யாத்திரையை கடந்த 11ம் தேதி பீகார் மாநிலம், சிதப் டயாரா பகுதியில் துவங்கினார். நாட்டின் பல்வேறு மாநிலங்கள் வழியாக சென்று, வெளிநாட்டில் கறுப்பு பணம் பதுக்கல், மத்திய அரசின் ஊழல் ஆகியவை குறித்து, அங்குள்ள பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பிரசாரம் செய்து வருகிறார். அத்வானியின் ரத யாத்திரை குறித்து, மகாராஷ்டிரா மாநில பா.ஜ., தலைவர் அதுல் ஷா கூறியதாவது:மகாராஷ்டிரா மாநிலத்தில், தன் ரத யாத்திரையை, வரும் 17 மற்றும் 18ம் தேதிகளில் நாக்பூர், வார்தா, யவாத்மால் மாவட்டங்களில் பயணம் செய்கிறார். பின், ஆந்திர மாநிலத்திற்கு செல்கிறார். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கோல்ஹாபூர், சங்கிலி, சதாரா, ரெய்காட், மும்பை மற்றும் அருகில் உள்ள தானே மாவட்டங்களில், நவம்பர் 2 முதல் 5ம் தேதி வரை, யாத்திரை மேற்கொள்கிறார். பா.ஜ., கட்சித் தலைவர் நிதின் கட்காரி நாக்பூரில் அத்வானியை வரவேற்பார். மும்பை மற்றும் தானே மாவட்டங்களில் அத்வானி யாத்திரை வரும் போது, லோக்சபா பா.ஜ., துணைத் தலைவர் கோபிநாத் முண்டே வரவேற்று அவருடன் செல்வார். இவ்வாறு அதுல்ஷா கூறினார்.


