Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/சமூக நலத்துறை நிதி உதவி திட்ட விதிமுறைகள் தளர்வு

சமூக நலத்துறை நிதி உதவி திட்ட விதிமுறைகள் தளர்வு

சமூக நலத்துறை நிதி உதவி திட்ட விதிமுறைகள் தளர்வு

சமூக நலத்துறை நிதி உதவி திட்ட விதிமுறைகள் தளர்வு

ADDED : ஆக 13, 2011 01:09 AM


Google News

தேனி : சமூக நலத்துறையின் கீழ், செயல்படுத்தப்பட்டு வரும் திருமண நிதி உதவித் திட்டம் உட்பட, ஐந்து நிதி உதவித் திட்டங்களிலும், விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன.

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டத்தின் கீழ், பட்டதாரி, இரண்டாண்டு பட்டயப் படிப்பு முடித்த, ஏழைப் பெண்களுக்கு, 50 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையும், 4 கிராம் தங்கமும், பிளஸ் 2 வரை படித்தவர்களுக்கு, 25 ஆயிரம் ரூபாயும், 4 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது. இதே போல், கலப்புத் திருமண நிதி உதவித்திட்டம், ஏழை விதவைகளின் பெண்களுக்கு, திருமண நிதி உதவித்திட்டம், விதவை மறுமண நிதி உதவித்திட்டம், ஆதரவற்ற பெண் திருமண நிதி உதவித் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.



இவற்றைப் பெறுவதற்கு ஜாதிச்சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று என, பல்வேறு சான்றுகளை இணைக்கும் நிலை, முன்பு இருந்தது. தற்போது, இவை மாற்றப்பட்டு, இருப்பிடச் சான்றுக்குப் பதில் ரேஷன்கார்டு இருந்தாலே போதுமானது. வருமானச் சான்று தனியாகப் பெற வேண்டியதில்லை. கல்விச்சான்றே வயதுக்கு ஆதாரமாக எடுத்துக்கொள்ளப்படும். பல பக்கங்கள் கொண்ட விண்ணப்ப படிவங்கள், இரண்டே பக்கங்கள் கொண்டதாக எளிமையாக்கப்பட்டுள்ளன.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us