ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்ற வருமான வரி கூடுதல் கமிஷனரிடம் விசாரிக்க அனுமதி
ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்ற வருமான வரி கூடுதல் கமிஷனரிடம் விசாரிக்க அனுமதி
ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்ற வருமான வரி கூடுதல் கமிஷனரிடம் விசாரிக்க அனுமதி
சென்னை:வருமான வரியை குறைக்க, 50 லட்ச ரூபாய் லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட வருமான வரி கூடுதல் கமிஷனர் உள்ளிட்ட மூவரை, ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ.,க்கு சென்னை சிறப்பு கோர்ட் அனுமதியளித்துள்ளது.சென்னை பெருங்குடியில், எவரான் கல்வி நிறுவனம் இயங்கி வருகிறது.
வருமான வரியை குறைத்து கட்டுவதற்காக, நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கி÷ஷாரிடம் புரோக்கர் மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 50 லட்ச ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என, பேரம் பேசப்பட்டது. கூடுதல் கமிஷனர் ரவீந்திராவின் வீட்டுக்கு கி÷ஷார் மற்றும் புரோக்கர் உத்தம்சந்த் போரா, 50 லட்ச ரூபாயை கொண்டு சென்றனர். அப்போது, மூன்று பேரையும் சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர். லஞ்சப் பணத்தையும் கைப்பற்றினர்.மூவரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, சென்னை சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை நீதிபதி யூசுப் அலி விசாரித்தார். வரும் 9ம் தேதி வரை மூன்று பேரையும் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதியளித்தார். 9ம் தேதி மாலை கோர்ட்டில் மூவரையும் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.இவர்கள் தரப்பில் தாக்கல் செய்த ஜாமின் மனுக்கள் மீதான விசாரணையை, 7ம் தேதிக்கு நீதிபதி யூசுப்அலி தள்ளிவைத்தார்.


