/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/திருநாவலூரில் திட்டக்குழு அதிகாரிகள் ஆய்வுதிருநாவலூரில் திட்டக்குழு அதிகாரிகள் ஆய்வு
திருநாவலூரில் திட்டக்குழு அதிகாரிகள் ஆய்வு
திருநாவலூரில் திட்டக்குழு அதிகாரிகள் ஆய்வு
திருநாவலூரில் திட்டக்குழு அதிகாரிகள் ஆய்வு
ADDED : செப் 08, 2011 11:52 PM
உளுந்தூர்பேட்டை : திருநாவலூர் முந்திரி நடவுகளை அரசு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
திருநாவலூர் ஒன்றியத்தில் 57.28 ஏக்கரில் முந்திரி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் 32.42 ஏக்கர் பரப்பில் சொட்டு நீர் பாசனம் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை தமிழ்நாடு அரசு மதிப்பீடு மற்றும் ஆராய்ச்சி துறை திட்ட பொருளாளர் சீனிவாசன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். அரசு திட்டங்கள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தனர். தோட்டக் கலைத்துறை துணை இயக்குனர் பன்னீர்செல்வம், வேளாண் துணை இயக்குனர் ராஜசேகரன், உதவி இயக்குனர் சுமதி, வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர் சுந்தரமூர்த்தி, வேளாண் அலுவலர்கள் ஜோதி ராமலிங்கம், அருட்செல்வன், கொளஞ்சி உடனிருந்தனர்.


