/உள்ளூர் செய்திகள்/அரியலூர்/அரியலூரில் தி.மு.க.,வினர் விருப்ப மனுத்தாக்கல்அரியலூரில் தி.மு.க.,வினர் விருப்ப மனுத்தாக்கல்
அரியலூரில் தி.மு.க.,வினர் விருப்ப மனுத்தாக்கல்
அரியலூரில் தி.மு.க.,வினர் விருப்ப மனுத்தாக்கல்
அரியலூரில் தி.மு.க.,வினர் விருப்ப மனுத்தாக்கல்
அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிட ஏராளமான தி.மு.க.,வினர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர்.அரியலூர் மாவட்டத்தில் நடக்கவுள்ள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் தி.மு.க., வினர் விருப்ப மனு தாக்கல் செய்யும் நிகழ்ச்சி, கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் கடந்த 5ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் தி.மு.க.,வினர், கட்சியின் தலைமை பிரதிநிதியான திருவொற்றியூர் விஸ்வநாதனிடம் விருப்ப மனு கொடுத்து வருகின்றனர்.அரியலூர் நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட, தி.மு.க., மாவட்ட துணை செயலாளர் வக்கீல் சாந்தி, நேற்று விருப்ப மனு தாக்கல் செய்தார்.
*அரியலூர் மாவட்ட பஞ்., கவுன்சிலர் பதவி செந்துறை வடக்கு பகுதிக்கு முருகேசன், திருமானூர் மேற்கு பகுதிக்கு சுந்தராம்பாள், கிழக்கு பகுதிக்கு விஜயகுமார், அரியலூர் தெற்கு பகுதிக்கு ராஜேந்திரன் உள்ளிட்டோரும் நேற்று விருப்ப மனுத்தாக்கல் செய்தனர்.


