/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/விஜயகாந்த் வகுத்துள்ள வியூகம் வெற்றியை தேடித் தரும் : தேமுதிக கணிப்புவிஜயகாந்த் வகுத்துள்ள வியூகம் வெற்றியை தேடித் தரும் : தேமுதிக கணிப்பு
விஜயகாந்த் வகுத்துள்ள வியூகம் வெற்றியை தேடித் தரும் : தேமுதிக கணிப்பு
விஜயகாந்த் வகுத்துள்ள வியூகம் வெற்றியை தேடித் தரும் : தேமுதிக கணிப்பு
விஜயகாந்த் வகுத்துள்ள வியூகம் வெற்றியை தேடித் தரும் : தேமுதிக கணிப்பு
ஆலங்குளம் : 'உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வகுத்துள்ள வியூகத்தால் வெற்றி பெறுவோம்' என நெல்லை மேற்கு மாவட்ட தேமுதிக செயலாளர் அய்யம்பெருமாள் தெரிவித்துள்ளார்.
திமுக.,-காங்., கட்சியினரை விட எங்கள் கட்சியினர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டி வருகின்றனர். எங்களது வேட்பாளர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள அடிப்படை பிரச்னைகளை பற்றி மக்களிடம் எடுத்துக்கூறி ஓட்டுகள் சேகரிக்க உள்ளனர். மேலும் தமிழகத்தில் குறுகிய காலத்தில் மக்கள் ஆதரவு பெருகிய இயக்கம் தேமுதிக தான்.
கூடன்குளம் பிரச்னையில் விஜயகாந்த் நேரில் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். உள்ளாட்சி தேர்தலில் கூடன்குளம் அனுமின் நிலைய விவகாரம் முக்கிய பங்கு வகிக்கும். தற்போதுள்ள சூழலில் சமூக அக்கறையுடன் செயல்பட்டு வரும் ஒரே இயக்கம் தேமுதிகதான். அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அளிக்க விஜயகாந்த் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார். அந்த கோரிக்கையை தமிழக அரசு இன்று நிறைவேற்றியுள்ளது. இவ்வாறு ஆக்கபூர்வ எதிர்கட்சியாக இன்று தேமுதிக மட்டுமே உள்ளது. எனவே இந்த உள்ளாட்சி தேர்தலில் மக்கள் எங்களுக்கு மகத்தான ஆதரவை தருவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


