"பிரச்னைகளை சமாளிக்க சோஷலிச ஜனநாயகம் தேவை'
"பிரச்னைகளை சமாளிக்க சோஷலிச ஜனநாயகம் தேவை'
"பிரச்னைகளை சமாளிக்க சோஷலிச ஜனநாயகம் தேவை'
ADDED : அக் 01, 2011 11:41 PM

பீஜிங்: 'சீனா தற்போது எதிர்கொண்டு வரும் சவால்களை சமாளிக்க வேண்டுமானால், நமக்கு, சீன சோஷலிச முறையிலான ஜனநாயகம் தேவை' என, சீன பிரதமர் வென் ஜியாபோ தெரிவித்துள்ளார்.
சீனாவில், மக்கள் ஜனநாயக சீனா உருவான 62 வது ஆண்டு விழா, நேற்று, தியானன்மென் சதுக்கத்தில் கொண்டாடப்பட்டது. அப்போது, பிரதமர் வென் ஜியாபோ பேசியதாவது: விலைவாசி அதிகரிப்பு, அன்றாடச் செலவு மற்றும் சம்பளத்திற்கிடையிலான சமச்சீரற்ற விகிதம், வேலையில்லா திண்டாட்டம், உணவுப் பாதுகாப்பு, ஊழல், சுற்றுச்சூழல் பாதிப்பு ஆகிய பிரச்னைகளை சீனா எதிர்கொண்டு வருகிறது. இவற்றைச் சமாளிக்க நமக்கு இன்னும் அதிகமான ஜனநாயக நடைமுறைகள் தேவை. இந்த ஜனநாயகம், சீன சோஷலிச பாணியில் அமைந்த ஜனநாயகமாக இருக்க வேண்டும். இவ்வாறு ஜியாபோ தெரிவித்தார்.
சீனாவில், பொதுவாக ஜனநாயகம் என்பது ஆட்சித் தலைவர்களால் அடிக்கடி உச்சரிக்கப்பட்டாலும், இன்னும் அங்கு அது கனவாகவே இருந்து வருகிறது. இந்த ஆண்டு விழாவையொட்டி, பல நூறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பல நூறு பேர், பீஜிங்கில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.


