/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/பைக் மீது கனரக வாகனம் மோதல்: வாலிபர் பலிபைக் மீது கனரக வாகனம் மோதல்: வாலிபர் பலி
பைக் மீது கனரக வாகனம் மோதல்: வாலிபர் பலி
பைக் மீது கனரக வாகனம் மோதல்: வாலிபர் பலி
பைக் மீது கனரக வாகனம் மோதல்: வாலிபர் பலி
ADDED : அக் 07, 2011 01:10 AM
பூந்தமல்லி : கனரக வாகனம் மோதியதில், பைக்கில் வந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார். சென்னை பூந்தமல்லி பாலத்தில், கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பை-பாஸ் சாலை வழியாகச் செல்ல வேண்டிய கனரக வாகனம் ஒன்று, பாலத்தின் மீது சென்றது. அரியானாவைச் சேர்ந்த பெல்ட் பிரகாஷ் லாரியை ஓட்டினார். திடீரென கனரக வாகனத்தை நிறுத்தி, பின்பக்கமாக இயக்கினார்.
அப்போது, பூந்தமல்லி பாலத்தில் பைக்கில் வந்த திருமழிசை, ஜவகர் தெருவைச் சேர்ந்த ஆனந்தராஜ், 24 என்பவர் மீது கனரக வாகனம் மோதியது. இதில் படுகாயமடைந்த ஆனந்தராஜ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார், அரியானாவைச் சேர்ந்த பெல்ட் பிரகாஷை கைது செய்தனர்.


