Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/இரட்டை வழி அகலப்பாதை பணி திருப்தி: ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் பேட்டி

இரட்டை வழி அகலப்பாதை பணி திருப்தி: ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் பேட்டி

இரட்டை வழி அகலப்பாதை பணி திருப்தி: ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் பேட்டி

இரட்டை வழி அகலப்பாதை பணி திருப்தி: ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் பேட்டி

ADDED : அக் 12, 2011 02:26 AM


Google News
விழுப்புரம் : முண்டியம்பாக்கத்திலிருந்து விழுப்புரம் வரை நடந்துள்ள பணிகள் திருப்தியாக இருந்தது என ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் மிட்டல் கூறினார்.செங்கல்பட்டிலிருந்து விழுப்புரம் வரை 105 கி.மீ., தூர இரு வழி அகல ரயில் பாதை அமைக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்து 500 கோடி ரூபாய் மதிப்பில் பணிகளை 2011ம் ஆண்டில் முடிக்க உத்தரவிட்டது.ஆரம்ப கட்ட பணிகள் 2008ம் ஆண்டு துவங்கியது.

2009ம் ஆண்டு முதல் பணிகள் 3 பிரிவுகளாக ரயில்வே நிர்வாகத்தின் கீழ் இயங்கும் கட்டுமான பிரிவினர் செய்து வருகின்றனர். முதற்கட்டமாக விழுப்புரம்- முண்டியம்பாக்கம் வரை 7 கி.மீ., தூரத்திற்கு இரட்டை வழிப் பாதை பணிகள் முடிந்து கடந்த பிப்., 28ம் தேதி ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நடந்தது.விழுப்புரம்- முண்டியம்பாக்கம் அகல ரயில் பாதை பணிகளை ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் (சி.ஆர்.எஸ்) மிட்டல் நேற்று ஆய்வு செய்தார். முண்டியம்பாக்கத்தில் நேற்று காலை 9.10 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. அங்குள்ள ஸ்டேஷன் மாஸ்டர் அறை, சிக்னல் அறை, பயணிகள் உட்காருமிடம், குடிநீர் வசதியை ஆய்வு செய்தார். காலை 9.40 மணிக்கு 7 டிராலிகளில் அதிகாரிகளுடன் புறப்பட்ட அவர் சிந்தாமணி ரயில்வே கேட், அய்யூர் அகரம் ரயில்வே கேட், அய்யூர் அகரம் பாலம் பகுதிகளில் ஆய்வு செய்தார்.உதவி பாதுகாப்பு ஆணையர் சாந்திராம், தென்னக ரயில்வே முதன்மை நிர்வாக அதிகாரி ராமநாதன், தென்னக ரயில்வே முதன்மை பொறியாளர் அனில் கந்தேல்வால், உதவி முதன்மை பொறியாளர் இளம்பூரணம், சென்னை கோட்ட மேலாளர் அனந்தராமன், சென்னை கோட்ட சிக்னல் பிரிவு அதிகாரி ஸ்ரீதர், முதன்மை பாதுகாப்பு அதிகாரி காந்தி, கோட்ட பொறியாளர் சாம்சன் விஜயகுமார், உதவி பொறியாளர்கள் எத்திராஜ், அன்பழகன் உட்பட பலர் உடன் வந்தனர்.மதியம் 1 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையத்திற்கு வந்து சிக்னல் பிரிவிற்கு சென்று முண்டியம் பாக்கம், விழுப்புரம் மார்க்கத்தில் சிக்னல் தடையின்றி கிடைக்கிறதா என ஆய்வு செய்தார். பின் விழுப்புரத்தில் இருந்து முண்டியம்பாக்கம் வரை அதிவேக சோதனை ஓட்டம் நடந்தது. மாலை 3.54 மணிக்கு விழுப்புரத்தில் புறப்பட்ட அதிவேக ரயில் 4 மணிக்கு முண்டியம்பாக்கம் சென்றடைந்தது.ஆய்வு குறித்து முண்டியம்பாக்கத்தில் ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் மிட்டல் நிருபர்களிடம் கூறுகையில், 'முண்டிம்பாக்கம்- விழுப்புரம் வரை 7 கி.மீ., தூர இரட்டை ரயில் பாதை பணிகள் முடிந்து ஆய்வு செய்யப்பட்டது. முண்டியம்பாக்கம்- விழுப்புரம் வரை காலையில் புறப்பட்டு டிராலியில் சென்று அனைத்து பணிகளையும் ஆய்வு செய்தோம். விழுப்புரத்தில் மாலை 3.54 மணிக்கு புறப்பட்டு மணிக்கு சராசரியாக 120 கி.மீ., வேகத்தில் மின்சார ரயிலை இயக்க அறிவுரை வழங்கி மாலை 4 மணிக்கு சேர்ந்துள்ளோம். அனைத்து பணிகள் மற்றும் அதிவேக சோதனை ஓட்டமும் திருப்திகரமாக இருந்தது' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us