/உள்ளூர் செய்திகள்/சேலம்/மணியனூரில் மேம்பாட்டு பணிதே.மு.தி.க., வேட்பாளர் உறுதிமணியனூரில் மேம்பாட்டு பணிதே.மு.தி.க., வேட்பாளர் உறுதி
மணியனூரில் மேம்பாட்டு பணிதே.மு.தி.க., வேட்பாளர் உறுதி
மணியனூரில் மேம்பாட்டு பணிதே.மு.தி.க., வேட்பாளர் உறுதி
மணியனூரில் மேம்பாட்டு பணிதே.மு.தி.க., வேட்பாளர் உறுதி
ADDED : அக் 12, 2011 02:29 AM
சேலம்: மாநகராட்சி தேர்தலில், 50வது வார்டு தே.மு.தி.க., வேட்பாளராக
போட்டியிடும் சிவகுமார் தீவிர தேர்தல் பிரச்சாரம்
மேற்கொண்டுள்ளார்.பிரச்சாரத்தின் போது பேசியதாவது:கவுன்சிலராக வெற்றி
பெற்றால், மணியனூர் அரசு பள்ளியை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இப்பகுதியில் உள்ள தாய்சேய் விடுதி அதிநவீன முறையில் படுக்கை வசதிகளுடன்
சீரமைத்து தரப்படும். மணியனூர் பகுதியில் மாநகராட்சி மூலம் திருமண மண்டபம்
கட்டப்படும்.மணியனூர் செவ்வாய்சந்தை பகுதியில், ஒரு கோடி ரூபாய் மதிப்பில்
கட்டப்பட்டுள்ள ஆடு வெட்டும் நவீன இறைச்சிக்கூடத்தை செயல்படுத்த நடவடிக்கை
எடுக்கப்படும்.
மணியனூர் இடுகாடு மற்றும் மேட்டு வெள்ளாள தெருவில் உள்ள
இடுகாடு ஆகியவற்றுக்கு எரிமேடை மற்றும் காம்ப்வுண்ட் அமைத்து
தரப்படும்.மணியனூரில் உள்ள மழைநீர் மற்றும் சாக்கடை நீரை கால்வாய் அமைத்து,
சின்ன கொண்டலாம்பட்டி வழியாக ஓடைக்கு கொண்டு செல்ல நிரந்தர தீர்வு
காணப்படும். ஊர் வட்டப்பகுதியில் உள்ள குறுகலான சாலைகள் கான்கிரீட்
சாலைகளாக சீரமைத்து தர ஏற்பாடு செய்யப்படும்.இவ்வாறு அவர் பேசியுள்ளார்.


