Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/நான் யாரையும் லஞ்சம் வாங்க விடமாட்டேன்தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் உறுதி

நான் யாரையும் லஞ்சம் வாங்க விடமாட்டேன்தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் உறுதி

நான் யாரையும் லஞ்சம் வாங்க விடமாட்டேன்தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் உறுதி

நான் யாரையும் லஞ்சம் வாங்க விடமாட்டேன்தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் உறுதி

ADDED : அக் 12, 2011 02:29 AM


Google News
நாமக்கல்: ''எங்கள் வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்தால், யாரையும் லஞ்சம் வாங்க விடமாட்டேன்,'' என்று நாமக்கல்லில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது, தே.மு.தி.க., நிறுவனத் தலைவர் விஜயகாந்ந் பேசினார்.நாமக்கல் நகராட்சி சேர்மன் வேட்பாளர் வக்கீல் வேல் மற்றும் வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் தே.மு.தி.க., வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் நிறுவனத் தலைவர் விஜயகாந்த், அண்ணாதுரை சிலை அருகில் பேசியதாவது:நமது கட்சிக்கு யோகம் கிடைக்கிறது. ஆஞ்சநேயர் பலம் ஆஞ்சநேயருக்கு தெரியாது என்பார்கள். அதுபோல் உங்கள் பலம் எதிரிக்கு தெரியாது. இளைஞர்கள் நினைத்தால் சாதிக்கலாம். உள்ளாட்சி என்பது தங்கள் உரிமையை தாங்களே நிறைவேற்றிக்கொள்வது. நாமக்கல்லில் பல பிரச்னைகள் உள்ளது. நாமக்கல் நகராட்சியில் எங்கள் தொண்டர்களை வெற்றி பெறச் செய்தால், யாரையும் லஞ்சம் வாங்க விடமாட்டேன். தப்பு நடக்க விடமாட்டேன். பிறந்தோம், வளர்ந்தோம் என இல்லாமல் சாதிக்க வேண்டும்.பொற்கால ஆட்சி, பொற்கால ஆட்சி என கூறுகின்றனர். உண்மையில் எம்.ஜி.ஆர்., ஒருவர் தான் பொற்கால ஆட்சியை தந்தார். அவரை மட்டும்தான் மக்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்தனர்.

அண்ணாதுரை பேரை சொல்லி யாரும் ஏமாற்றாதீர்கள். மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை, சொந்த பணத்தில் இருந்துதான் செய்து கொடுத்தேன். உள்ளாட்சியை கொடுத்தால், நல்லாட்சி கொடுக்க மாட்டேனா? உங்களை வாழவைக்க மாட்டேனா? நல்லது செய்வதற்காக, தமிழகம் முழுவதும் சுற்றி சுற்றி வருகிறேன்.இரண்டு கட்சிகளுக்கும் மாறி மாறி குத்தினீர்கள். மாற்றத்தை கொடுக்கும் முரசுக்கு ஓட்டு போடுங்கள். அப்போதுதான் அவர்களுக்கு பயம் இருக்கும். ஊழல் செய்வோரின் ஆணிவேர் உங்களுக்கு தெரியும். ஓட்டுக்கள்தான் நீங்கள் அவர்களுக்கு வைக்கும் வேட்டு. உங்கள் பலத்தை காட்டும் நேரம் இது. நான் தெய்வத்தையும், மக்களையும் நம்புகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us