/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/கோவில்பட்டிக்கு 2வது பைப்லைன் திட்டத்தை யாரும் தடுக்க முடியாதுகோவில்பட்டிக்கு 2வது பைப்லைன் திட்டத்தை யாரும் தடுக்க முடியாது
கோவில்பட்டிக்கு 2வது பைப்லைன் திட்டத்தை யாரும் தடுக்க முடியாது
கோவில்பட்டிக்கு 2வது பைப்லைன் திட்டத்தை யாரும் தடுக்க முடியாது
கோவில்பட்டிக்கு 2வது பைப்லைன் திட்டத்தை யாரும் தடுக்க முடியாது
ADDED : அக் 13, 2011 05:39 AM
கோவில்பட்டி: கோவில்பட்டிக்கு இரண்டாவது பைப்லைன் திட்டம் நிறைவேறுவதை
யாராலும் தடுக்க முடியாது என்று மா.கம்யூ., சட்டசபைக்குழு தலைவர் தேமுதிக
கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தபோது பேசினார்.கோவில்பட்டி
நகராட்சி சேர்மன், கவுன்சிலர், யூனியன் கவுன்சிலர், பஞ்., தலைவர் மற்றும்
வார்டு உறுப்பினர் பதவிகளில் தேமுதிக தலைமையிலான கூட்டணி கட்சியினர்
போட்டியிடுகின்றனர். இவர்களுக்கு ஆதரவு கேட்டு மா.கம்யூ., கட்சியின்
சட்டசபைக்குழு தலைவரும், மாநில செயற்குழு உறுப்பினருமான சவுந்தர்ராஜன்
நேற்று முன்தினம் கோவில்பட்டியில் பிரசாரம் செய்தார். கோவில்பட்டி பயணியர்
விடுதி முன்பு நடந்த பிரசார கூட்டத்திற்கு மா.கம்யூ., நகர செயலாளர்
சீனிவாசன் தலைமை வகித்தார். தொடர்ந்து மா.கம்யூ., சட்டசபைக்குழு தலைவர்
சவுந்தர்ராஜன் பேசியதாவது, தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு திமுக, அதிமுக
அரசுகள் நிதி ஒதுக்க வில்லை. இதனால் உள்ளாட்சி அமைப்புகள்
நிதிப்பற்றாக்குறையால் தத்தளித்து வருகிறது. ஆனால் கேரளா, மேற்குவங்கம்,
கர்நாடகா, மஹாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களில் உள்ளாட்சிகளுக்கு 30 சதவீதம்
நிதி ஒதுக்கப்படுகிறது. அதுபோன்று அதிக நிதியை உள்ளாட்சி அமைப்புகளுக்கு
பெற்றுத்தர மா.கம்யூ., போராடும். கோவில்பட்டி மட்டுமின்றி தமிழகம்
முழுவதும் குடிநீர் பிரச்னை உள்ளது. இதுவரை நான்கு குடிநீர் திட்டங்கள்
நிறைவேற்றப்பட்ட தூத்துக்குடி மாநகராட்சியிலும் வாரத்திற்கு ஒருமுறை தான்
குடிநீர் கிடைக்கிறது. மத்திய மாநில அரசுகள் மக்களின் குடிநீர் பிரச்னையில்
கவனம் செலுத்தாததே இதற்கு காரணம். கோவில்பட்டியில் இதற்கு முன்பிருந்த
திமுக அதிமுக நகராட்சி நிர்வாகங்கள் குடிநீர் திட்ட மதிப்பீடு செய்து
அனுப்பியதில்லை. சிபிஎம் நிர்வாகம் மட்டுமே மதிப்பீடு தயார் செய்து,
காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தி திட்டத்தை அரசு கோப்புகளில்
சேர்த்துள்ளது. கோவில்பட்டி குடிநீர் பிரச்னை குறித்து சட்டசபையில்
பேசியபோது, பணிகள் மேற்கொள்ளப்படுமென தெரிவித்தனர்.
ஆகவே கோவில்பட்டிக்கு
இரண்டாவது பைப்லைன் திட்டம் நிறைவேறுவதை யாராலும் தடுக்க முடியாது.
கோவில்பட்டியில் ஐந்து ஆண்டுகாலம் ஊழலற்ற நகராட்சி நிர்வாகத்தை மா.கம்யூ.,
கட்சி கொடுத்துள்ளது. ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் தேமுதிக தலைவர்
விஜயகாந்துடன் தற்போது கூட்டணி வைத்து போட்டியிடுவதால், மீண்டும் ஊழலற்ற
உள்ளாட்சி அமைய கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்ய வேண்டுமென
மா.கம்யூ., சட்டசபைக்குழு தலைவர் சவுந்தர்ராஜன் பேசினார். நிகழ்ச்சியில்
கோவில்பட்டி நகராட்சி முன்னாள் சேர்மனும், தற்போதைய தேமுதிக கூட்டணி
சேர்மன் வேட்பாளருமான மல்லிகா, வேட்பாளர்கள் ஜோதிபாசு, முத்துராஜ்,
முத்துலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


