ADDED : அக் 07, 2011 10:33 PM
விருதுநகர் : ''சிவஞானபுரம் ஊராட்சியில் விடுபட்ட ஊர்களில் புதிய ரேஷன் கடைகள் அமைத்து கொடுப்பேன்,'' என, ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் ரவிக்குமார் தெரிவித்தார்.
அவர், லெட்சுமி நகர் பகுதியில் ஓட்டுகள் சேகரித்த அ வர் கூறியதாவது: சிவஞானபுரம் ஊராட்சியில் ஏற்கனவே தலைவராக இருந்துள்ள நான், தற்போது தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன். நந்திரெட்டியபட்டி, மீனாட்சிபுரம், பாப்பாகுடி, சின்ன மூப்பன்பட்டி, கருப்பசாமி நகர், லெட்சுமி நகர், என்.ஜி.ஓ. காலனி ஆகிய பகுதிகளில் விடுபட்ட ரோடுகளை உடனடியாக போடுவதற்கு நடவடிக்கை எடுப்பேன். லெட்சுமி நகர் பெரியோர்களை கலந்தாலோசித்து எனது சொந்த செலவில் கோவில் கட்டி தருவேன். லெட்சுமி நகர், கருப்பசாமி நகர், நந்திரெட்டியபட்டியில் புதிதாக ரேஷன் கடைகள் கொண்டு வருவேன். பாப்பாபட்டி, கருப்பசாமி நகரில் புதிய மயானம் கட்டி கொடுப்பேன். ஊராட்சி பகுதிகளில் திருடர்கள் பயத்தை போக்க ,இரவு காவலர் ரோந்து ஏற்படுத்துவேன். மக்களோடு மக்களாக ஒன்றி பழகுவதால், அவர்களின் அன்றாட பிரச்னையை உடனுக்குடன் தீர்ப்பேன், என்றார்.


