/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ஓட்டுச்சாவடி அனுமதிக்காக கூடுகிறது மாநகராட்சிஓட்டுச்சாவடி அனுமதிக்காக கூடுகிறது மாநகராட்சி
ஓட்டுச்சாவடி அனுமதிக்காக கூடுகிறது மாநகராட்சி
ஓட்டுச்சாவடி அனுமதிக்காக கூடுகிறது மாநகராட்சி
ஓட்டுச்சாவடி அனுமதிக்காக கூடுகிறது மாநகராட்சி
ADDED : ஆக 30, 2011 09:41 PM
சென்னை : சென்னை மாநகராட்சி தேர்தல், கிரேட்டர் சென்னைக்கு நடப்பதால், தேர்தல் வேலைகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன.
சென்னை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்டு, 'கிரேட்டர் சென்னை'யாக மாறியுள்ளது. 'கிரேட்டர் சென்னை'க்கு நேரடி மேயர் மற்றும் கவுன்சிலர்கள் தேர்தல் நடப்பதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இந்நிலையில், திருத்தி அமைக்கப்பட்ட வார்டுகளுக்கு தேர்தல் என்பதால், ஓட்டு சாவடிகளும் மாற்றப்பட்டு உள்ளன. புதிய ஓட்டு சாவடிகள், 4,641 அமைக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இதற்கு, மன்ற அனுமதி அளிப்பதற்காக, மாநகராட்சி கூட்டம் வரும் 8ம் தேதி கூடுகிறது. 'இந்த கூட்டத்தில், 10 மண்டலமாக உள்ள சென்னை மாநகராட்சி, 15 மண்டலமாக உயர்த்தப்படுவதற்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. இவ்விரு தீர்மானங்கள் நிறைவேற்றுவதற்கு மட்டுமே கவுன்சில் கூடுவதால், வேறு பிரச்னைகள் குறித்து விவாதங்கள் எதுவும் நடைபெறாது' என, மேயர் சுப்ரமணியன் தெரிவித்தார்.


