அனைத்து ஓட்டுச் சாவடிகளையும் பதட்டமானதாக அறிவிக்க கோரிக்கை
அனைத்து ஓட்டுச் சாவடிகளையும் பதட்டமானதாக அறிவிக்க கோரிக்கை
அனைத்து ஓட்டுச் சாவடிகளையும் பதட்டமானதாக அறிவிக்க கோரிக்கை
ADDED : அக் 07, 2011 09:49 PM
சென்னை : ''மாநகராட்சி பகுதியின் அனைத்து ஓட்டுச் சாவடிகளையும், பதட்டமான சாவடிகளாக அறிவிக்க வேண்டும்'' என, அனைத்துக் கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் பற்றி, மேயர் வேட்பாளர்களுக்கு எடுத்துரைப்பதற்காக, மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் மற்றும் போலீஸ் கூடுதல் கமிஷனர் தமிழ்செல்வன், இணை கமிஷனர் சேஷசாய் ஆகியோர் தலைமையிலான கூட்டம், நேற்று ரிப்பன் கட்டடத்தில் நடந்தது.
இதில், மேயர் வேட்பாளர்களும், அவர்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசியோர், 'மேயருக்கான ஓட்டு எண்ணிக்கையை, ஒரே இடத்தில் நடத்த வேண்டும்' என, கேட்டுக் கொண்டனர். 'மாநகராட்சி பகுதியில் உள்ள 4,876 ஓட்டுச் சாவடிகளிலும், வன்முறைகள் நடக்கும் என எதிர்பார்க்கிறோம். எனவே, அனைத்து ஓட்டுச் சாவடிகளையும் பதட்டம் நிறைந்ததாக அறிவிக்க வேண்டும்' எனவும் வலியுறுத்தினர். 'தேர்தல் விதிமுறைகளை வேட்பாளர்கள் பின்பற்றி நடக்க வேண்டும். விதிகளை மீறுபவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்' என, தேர்தல் அலுவலர் தெரிவித்தார்.


