/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வருங்கால வைப்புநிதி குறைதீர்க்கும் கூட்டம்வருங்கால வைப்புநிதி குறைதீர்க்கும் கூட்டம்
வருங்கால வைப்புநிதி குறைதீர்க்கும் கூட்டம்
வருங்கால வைப்புநிதி குறைதீர்க்கும் கூட்டம்
வருங்கால வைப்புநிதி குறைதீர்க்கும் கூட்டம்
ADDED : அக் 10, 2011 10:25 PM
கோவை : கோவை மண்டல வருங்கால வைப்பு நிதி துறை சார்பில் மாதாந்திர குறைதீர்க்கும் கூட்டம், அலுவலகத்தில் நேற்று காலை நடந்தது.
கோவை மண்டல கமிஷனர்-1 வர்கீஸ் மற்றும் மண்டல கமிஷனர்-2 அமுதா ஆகியோர் குறைகள் பற்றி விண்ணப்பித்த 17 பேர் மனுக்களை விசாரித்தனர்.இது குறித்து மண்டல கமிஷனர்-2 அமுதா கூறியதாவது:கோவை மண்டல வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் மாதந்தோறும் 10ம் தேதி குறைதீர்க்கும் கூட்டம் நடந்து வருகிறது. பலரும் நேரில் பங்கேற்று தங்கள் குறைகளை எடுத்துக்கூறி உடனே தீர்வும் பெற்று திருப்தியுடன் செல்கின்றனர். இந்த கூட்டத்தில் பங்கேற்க ஏற்கனவே 17 பேர் விண்ணப்பித்தனர். இவர்களில் அனைவரின் மனுக்களும் விசாரிக்கப்பட்டு, திருப்திகரமான தீர்வுகள் காணப்பட்டன. அதில் இரண்டு பேருக்கு இடமாற்றம் சம்பந்தமாக உள்ள குறைகளும் களையப்பட்டன. கடந்தமாதம் நடந்த கூட்டத்தில் விண்ணப்பித்தவருக்கு தீர்வு ஏற்பட்டதால் கூட்டத்தில் தனது நன்றியை தெரிவித்தார். கடந்த 1986லிருந்து நிலுவையிலுள்ள தமிழ்நாடு மின்வாரிய பிரச்னைகள் சம்பந்தமாக 15 ஊழியர்களின் குறைகள் சிறிது சிறிதாக தீர்வு காணப்பட்டு வருகின்றன. கடந்த ஒரு ஆண்டில் 320 பேர் குறைதீர்க்கும் கூட்டம் மூலம் பயன் பெற்றுள்ளனர். தற்போது கம்ப்யூட்டர், இண்டர்நெட் வசதி என நவீன தொழில்நுட்பம் மூலம் விரைவில் மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.இவ்வாறு மண்டல கமிஷனர்-2 அமுதா தெரிவித்தார்.


