Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/தென்காசி ஆஸ்பத்திரியில் ரூ.10 ஆயிரம் கொள்ளை

தென்காசி ஆஸ்பத்திரியில் ரூ.10 ஆயிரம் கொள்ளை

தென்காசி ஆஸ்பத்திரியில் ரூ.10 ஆயிரம் கொள்ளை

தென்காசி ஆஸ்பத்திரியில் ரூ.10 ஆயிரம் கொள்ளை

ADDED : ஆக 13, 2011 01:26 AM


Google News
தென்காசி : தென்காசி விஷக்கடிக்கு சிகிச்சை அளிக்கும் ஆஸ்பத்திரியில் 10 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்து சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

தென்காசி வாய்க்கால் பாலம் பகுதியில் விஷக்கடிக்கு சிகிச்சை அளிக்கும் தனியார் ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு வைத்தியர் லட்சுமணன் (60) சிகிச்சை அளிக்கிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் ஆஸ்பத்திரியை பூட்டி விட்டு லட்சுமணன் வீட்டிற்கு சென்று விட்டார். நள்ளிரவு நேரத்தில் யாரோ ஆஸ்பத்திரியின் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்கு மேஜையில் இருந்த 10 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்து சென்று விட்டனர். இதுபற்றி தென்காசி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து ஆஸ்பத்திரியில் பணத்தை கொள்ளையடித்து சென்ற நபரை தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us