Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/எட்டயபுரத்தில் வரும் 24ம் தேதி பாரதி பொன்விழா போட்டிகள் : மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு

எட்டயபுரத்தில் வரும் 24ம் தேதி பாரதி பொன்விழா போட்டிகள் : மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு

எட்டயபுரத்தில் வரும் 24ம் தேதி பாரதி பொன்விழா போட்டிகள் : மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு

எட்டயபுரத்தில் வரும் 24ம் தேதி பாரதி பொன்விழா போட்டிகள் : மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு

ADDED : ஆக 21, 2011 01:46 AM


Google News
எட்டயபுரம் : எட்டயபுரத்தில் பாரதி முற்போக்கு வாலிபர் சங்கம் பாரதி விழாவின் பொன் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவியர்களிடையே வரும் 24ம் தேதி பல்வேறு கலை இலக்கிய போட்டிகள் நடக்கிறது.

எட்டயபுரத்தில் செப்டம்பர் 17 மற்றும் 18 ஆகிய இரண்டு நாட்கள் பாரதி முற்போக்கு வாலிபர் சங்கம் சார்பில் பாரதி விழாவின் பொன்விழா நடக்கிறது. விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவியர்களிடையே பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஒப்புவித்தல் போட்டி, பாட்டுப்போட்டி ஆகிய போட்டிகள் வரும் 24ம் தேதி நடக்கிறது. தொடக்கநிலை மாணவ, மாணவிகளுக்கு (4 மற்றும் 5ம் வகுப்பு) ஒப்புவித்தல் போட்டி, ஓவியப்போட்டி, பாட்டுபோட்டி, நடுநிலை (6,7 மற்றும் 8ம் வகுப்பு) பேச்சுப்போட்டி, கட்டுரைபோட்டி, பாட்டுபோட்டி உயர்நிலை (9 மற்றும் 10ம் வகுப்பு) பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, வினாடி வினா போட்டி மேல்நிலை (11,12ம் வகுப்பு) பேச்சுப்போட்டி, கட்டுரைபோட்டி, வினாடி வினா போட்டி நடக்கிறது. கொடுக்கப்பட்ட தலை ப்புகளை பயன்படுத்த வேண்டும். மேலும் விபரங்களுக்கு 98941 92404 தொடர்பு கொள்ளவும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us