UPDATED : ஆக 28, 2011 08:11 PM
ADDED : ஆக 28, 2011 02:31 PM
புதுடில்லி: 12 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த அன்னா ஹசாரேவின் உடல்நிலை நலமாக உள்ளது என அவரை பரிசோதித்த டாக்டர் டிரிகான் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் அன்னா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் ஓய்வெடுத்து வருகிறார். அவருடைய ரத்த அழுத்தம் 110/70 என்ற அளவிலும், நாடித்துடிப்பு 94 என்ற அளவிலும் உள்ளது. அன்னாவின் உடல்எடை 7.5 கிலோ குறைந்துள்ளது. அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை குறித்து கவலைப்பட தேவையில்லை. அவருக்கு இளநீர், தேன் போன்ற நீராகரங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இது குறைந்தது 48 மணி நேரம் தொடரும். அன்னாவின் சிறுநீரகம், குடல் போன்றவை பரீசோதனை செய்யப்பட்டு வருகிறது. அவருடைய உடல்நிலை சீரானவுடன் வீடு திரும்புவார் என கூறினார்.


