ADDED : செப் 02, 2011 11:58 PM
கொடைக்கானல் : மலைப்பகுதியிலுள்ள கிராமங்களில், பஸ் வசதி இல்லாததால் மக்கள் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
கொடைக்கானல் தாலுகாவிற்குட்பட்ட அடுக்கம், கீழானவயல், உப்பு பாறைமெத்து, பேத்துப்பாறை, அஞ்சுவீடு கிராமங்கள் உள்ளன. பஸ் வசதியில்லாததால் பள்ளி செல்லும் மாணவர்கள், உரிய நேரத்தில் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். கிராம மக்கள் பல முறை மனு கொடுத்தும் இதுவரையில் நடவடிக்கை இல்லை. ரோடு வசதியிருந்தும் பஸ் வசதி ஏற்படுத்திதருவதில் தாமதம் ஏற்பட்டுவருகிறது. விரைவில் பஸ் இயக்க போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் இந்த கிராமங்களில்விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு விளையக்கூடிய காய்கறிகள், குறிப்பிட்ட நேரத்திற்குள் மார்க்கெட்டிற்கு அனுப்புவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதிக தொகை கொடுத்து வேன், ஜீப்களில் அனுப்பி வைக்கப்படுகின்றன. இப்பகுதியில் போக்குவரத்து வசதியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.


