ADDED : செப் 03, 2011 12:14 AM
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டியில் இளம்பெண் கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டார்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கோயில்பட்டி கிராமத்தை சேர்ந்த கருப்பையா மகள் ஜெயப்பிரதா,20. ஆண்டிபட்டியில் உள்ள 'ஸ்வீட்' கடையில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் மாலை வேலை முடித்து சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று காலை, ஆண்டிபட்டியில் உள்ள, மதுரை காமராஜர் பல்கலை கல்லூரி பின்புறம், இறந்து கிடந்தார். சேலையால் கழுத்தை இறுக்கி கொலை செய்திருந்தனர். கைப்பையில் இருந்த வாக்காளர் அடையாள அட்டையை வைத்து போலீசார் தகவல் தெரிவித்தனர். அவருக்கு மாப்பிள்ளை பார்த்து வந்த நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது மொபைல் போனையும் காணவில்லை. டி.எஸ்.பி., விஜயபாஸ்கர் தலைமையில், போலீசார் விசாரிக்கின்றனர்.


