UPDATED : செப் 03, 2011 04:49 PM
ADDED : செப் 03, 2011 11:48 AM
புதுடில்லி: பிரதமர் மன்மோகன் சிங்கின் சொத்து விபரத்தை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
பிரதமருக்கு மொத்தம் ரூ. 4.8 கோடி சொத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமருக்கு சொந்தமாக தெற்கு டில்லியில் வசந்த் குஞ்ச் என்ற பகுதியில் ஒரு பிளாட்டும், சண்டிகரில் ஒரு வீடும் உள்ளது. அவருக்கு சொந்தமாக ஒரு மாருதி 800 கார் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 150 கிராம் அளவுக்கு தங்க நகைகள் உள்ளன. அவருக்கு சொந்தமாக நிலம் ஏதுமில்லை என்று கூறப்பட்டுள்ளது. பிரதமர் மனைவி குர்ஷரண் கவுர் பெயரில் வங்கியில் 11 லட்ச ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு வங்கிகளில் 3.22 கோடி ரூபாய் அளவுக்கு டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.மத்திய அமைச்சர்களின் சொத்து விபரங்கள் http://pmindia.nic.in/ என்ற தளத்தில் உள்ளது.


