Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெரம்பலூர்/அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவர் பரிதாப பலி

அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவர் பரிதாப பலி

அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவர் பரிதாப பலி

அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவர் பரிதாப பலி

ADDED : செப் 07, 2011 01:52 AM


Google News
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவர் இறந்தார்.

பாடாலூர் கடைவீதி பகுதியை சேர்ந்தவர் பிச்சைபிள்ளை (60). இவர் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாடாலூர் கடைவீதி பகுதியில் நேற்று முன்தினம் இரவு சாலையை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியே சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த பிச்சைபிள்ளை சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தார். பிச்சைப்பிள்ளை மகன் ராமலிங்கம் கொடுத்த புகாரின்பேரில் பாடாலூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us