Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/முள்ளிப்பள்ளத்தில் எரியாத விளக்குகளால் மக்கள் அச்சம்

முள்ளிப்பள்ளத்தில் எரியாத விளக்குகளால் மக்கள் அச்சம்

முள்ளிப்பள்ளத்தில் எரியாத விளக்குகளால் மக்கள் அச்சம்

முள்ளிப்பள்ளத்தில் எரியாத விளக்குகளால் மக்கள் அச்சம்

ADDED : செப் 08, 2011 01:51 AM


Google News

முள்ளிப்பள்ளம் : சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் ஊராட்சி கூட்டத்தில் தெருவிளக்குகள் எரியாததால், மக்கள் அச்சத்தில் இருப்பதாக உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர்.

முள்ளிப்பள்ளம் ஊராட்சி அலுவலகத்தில் உறுப்பினர்கள் கூட்டம் தலைவர் லட்சுமி தலைமையில் நடந்தது. துணைதலைவர் யாகூப்கான் முன்னிலை வகித்தார். ஊராட்சி உதவியாளர் சுமதி வரவேற்றார். உறுப்பினர்கள் ஆவுடையப்பன், நாகராஜ், சாந்தி, பாக்கியம்மாள் ஆகியோர், ஆறு மாதங்களுக்கு மேலாகியும் தெருவிளக்குகள் எரியவில்லை. கிராமம் இருள்சூழ்ந்து இருப்பதால் இரவு நேரத்தில் பெண்கள், குழந்தைகள் நடக்க அச்சப்படுகின்றனர். இருட்டை பயன்படுத்தி திருட்டுகள் நடக்கின்றன,'' என்றனர். இதற்கு பதிலளித்த தலைவி லட்சுமி, ''ஊராட்சியில் நிதி இல்லையென்றாலும், சொந்த பணத்தை கொடுத்தும்கம்பத்தில் ஏறி விளக்கு பொருத்த மின் ஊழியர் பாண்டியராஜன் மறுக்கிறார். ஊழியரின் அலட்சிய போக்கை கண்டித்து உதவிகோட்ட மின் பொறியாளர் பாலசுப்பிரமணியத்திடம் புகாரிட்டும் பயனில்லை,'' என்றார். மின் ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறுப்பினர்கள் வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து கலெக்டர் கவனத்திற்கு கொண்டு செல்வதாக தலைவர் உறுதியளித்ததையடுத்து, கூட்டத்தில் அமைதி ஏற்பட்டது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us