/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/குமரி மாவட்டத்தில் முதல் பிரசவம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிசேரியன்குமரி மாவட்டத்தில் முதல் பிரசவம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிசேரியன்
குமரி மாவட்டத்தில் முதல் பிரசவம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிசேரியன்
குமரி மாவட்டத்தில் முதல் பிரசவம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிசேரியன்
குமரி மாவட்டத்தில் முதல் பிரசவம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிசேரியன்
ADDED : செப் 13, 2011 12:13 AM
மார்த்தாண்டம் : ஆறுதேசம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல் முறையாக சிசேரியன் மூலம் பிறந்த குழந்தையை கலெக்டர் பார்வையிட்டார்.
குமரி மாவட்டத்தில் கொல்லங்கோடு, தூத்தூர், ஆறுதேசம், முன்சிறை, தேங்காப்பட்டணம், ஐரேணிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. வழக்கமாக ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுக பிரசவங்கள் மட்டுமே நடந்து வந்தன. அறுவை சிகிச்சை தேவைப்படுபவர்களை அருகில் உள்ள தாலுகா அஸ்பத்திரிகள், மாவட்ட ஆஸ்பத்திரி, மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரிக்கு டாக்டர்கள் பரிந்துரை செய்து அனுப்பி வைப்பர். இந்நிலையில் குமரி மாவட்டத்தில் முதல் முறையாக ஆறுதேசம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 9ம் தேதி அறுவை சிகிச்சை மூலம் நடைக்காவு அருகே போராங்கோட்டை சேர்ந்த அஜிதா என்ற பெண்ணிற்கு ஆண் குழந்தை பிறந்தது. இத்தகவல் மாவட்ட சுகாதார துறை மூலம் அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. தகவலையடுத்து மாவட்ட கலெக்டர் மதுமதி நேற்று மாலை ஆறுதேசம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பெண் மற்றும் குழந்தையை பார்வையிட்டார். மேலும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் சார்பில் குழந்தைக்கு தரப்பட்ட இரண்டு தங்க மோதிரங்களை கலெக்டர் அக்குழந்தையின் தாயாரிடம் வழங்கினார். மேலும் அறுவை சிகிச்சை மேற்கொண்ட டாக்டர்கள் வினோதினி, அனூப் ஆகியோரை பாராட்டினார். தாயும், சேயும் நலமாக இருப்பதாக கலெக்டர் தெரிவித்தார். கலெக்டருடன் சுகாதாரத்துறை அதிகாரிகள், பி.ஆர்.ஓ., ஹரிராம் ஆகியோர் உடனிருந்தனர்.


