/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/கடல் அரிப்பால் இடிந்த சமுதாயக்கூடம்கடல் அரிப்பால் இடிந்த சமுதாயக்கூடம்
கடல் அரிப்பால் இடிந்த சமுதாயக்கூடம்
கடல் அரிப்பால் இடிந்த சமுதாயக்கூடம்
கடல் அரிப்பால் இடிந்த சமுதாயக்கூடம்
ADDED : செப் 14, 2011 03:09 AM
மாமல்லபுரம்:மாமல்லபுரம் அருகே, கடல் அரிப்பால், சமுதாயக்கூடம் இடிந்து
விழுந்தது.மாமல்லபுரம் அடுத்த சூலேரிக்காடு குப்பத்தில், கடல் நீரை
குடிநீராக்கும் திட்டப்பணி நடந்து வருகிறது. அதையொட்டி, கடலில் குழாய்கள்
புதைக்கும் பணிக்காக, கடலோரத்தில் கற்களைக் கொட்டி தடுப்பு அரண்
அமைத்துள்ளனர்.
ஒருபுறத்தில் அமைக்கப்பட்ட தடுப்பு அரணால், மீனவர் வசிப்பிடப் பகுதியில்
கடல்நீர் புகுந்து, நிலப்பகுதியை அரித்து வருகிறது. இங்கு, ரோட்டரி சங்கம்
சார்பில், ஐந்து ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சமுதாயக்கூடம், கடல் அரிப்பு
காரணமாக, கடந்த சில மாதங்களாக அந்தரத்தில் தொங்கியது.
நேற்று முன்தினம்
கடல் அரிப்பு அதிகரித்ததால், கட்டடம் இடிந்து கடலில் விழுந்தது.
செங்கல்பட்டு ஆர்.டி.ஓ., செல்லப்பா நேரில் சென்று பார்வையிட்டார்.இது
குறித்து, அவர் கூறும்போது, 'சமுதாயக் கூடம் கடல் அரிப்பால் சேதமடைந்து,
ஏற்கனவே அந்தரத்தில் தொங்கியது. தற்போது இடிந்துவிட்டது. சென்னை குடிநீர்
வாரியம் புதிய சமுதாயக்கூடம் கட்டித் தர ஒப்புக்கொண்டுள்ளது. கடல் அரிப்பு
ஏற்படுவதை தடுக்க, கடலோரம் கற்கள் கொட்டுவதாகவும் தெரிவித்துள்ளனர்'
என்றார்.