Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பள்ளியில் பேரிடர் மேலாண்மை கருத்தரங்கம்

பள்ளியில் பேரிடர் மேலாண்மை கருத்தரங்கம்

பள்ளியில் பேரிடர் மேலாண்மை கருத்தரங்கம்

பள்ளியில் பேரிடர் மேலாண்மை கருத்தரங்கம்

ADDED : செப் 16, 2011 01:25 AM


Google News
உடுமலை:உடுமலை பூலாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளியில், முப்பெரும் விழா மற்றும் பேரிடர் மேலாண்மை செயல்முறை கருத்தரங்கம் நடந்தது.

உடுமலை பூலாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளியில், ஆசிரியர்கள் தின விழா, இலக்கிய மன்ற விழா மற்றும் முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி என முப்பெரும் விழா நடந்தது. பள்ளித்தலைமையாசிரியர் (பொறுப்பு) தமிழ்மணி தலைமை வகித்தார். விலங்கியல் ஆசிரியர் கருப்புசாமி, முதுகலை கணித ஆசிரியர் ஜெயலட்சுமி முன்னிலை வகித்தனர்.பள்ளியின் முன்னாள் மாணவர் கார்த்திக் வரவேற்றார். முன்னாள் தலைமையாசிரியர் அம்சவேணி, பள்ளி ஆசிரியர் சங்க செயலர் ராமதுரை, இலக்கிய மன்ற செயலர் தன்னாசி உட்பட பலர் பேசினர். முதுகலை தமிழாசிரியர் சரவணன் 'ஆசிரியர் சமுதாயம்' என்ற தலைப்பில் பேசினார். முன்னாள் மாணவ, மாணவிகள் சார்பில், ஆசிரியர்களுக்கு திருக்குறள் புத்தகம் நினைவுப்பரிசாக வழங்கப்பட்டது.விழாவையொட்டி, மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.

பேரிடர் மேலாண்மை செயல்முறை கருத்தரங்கம்: பூலாங்கிணறு அரசு மேல்நிலைப் பள்ளியின் நாட்டுநலப்பணித்திட்டம் மற்றும் பொள்ளாச்சி சரஸ்வதி தியாகாராஜா கல்லூரி சார்பில்,108 அவசர ஊர்தி பயன்பாடு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் செய்முறை பயிற்சி நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் தலைமை வகித்தார். நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் சரவணன் வரவேற்றார். சரஸ்வதி தியாகராஜா கல்லூரியின் முதுகலை சமூக சேவை துறை உதவிப்பேராசிரியர் சோபி போவாஸ், 108 அவசர ஊர்தியின் குழுவைச் சேர்ந்த ராஜாத்தி, முதல் உதவி செய்வது குறித்தும், செயல்முறைப்பயிற்சியின் மூலம் விளக்கினர். கல்லூரியின் முதுகலை சமூக சேவை துறை மாணவர் ராஜேஷ் நன்றி கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us