புலிகளின் தங்கத்தை திருப்பி தர இலங்கை அரசுக்கு கோரிக்கை
புலிகளின் தங்கத்தை திருப்பி தர இலங்கை அரசுக்கு கோரிக்கை
புலிகளின் தங்கத்தை திருப்பி தர இலங்கை அரசுக்கு கோரிக்கை

கொழும்பு: 'விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றிய தங்கத்தை, இலங்கை அரசு திருப்பித் தர வேண்டும்.
விடுதலைப் புலிகள், தனித் தமிழீழம் அமைவதற்காக நிதி சேகரித்தனர். அதன்படி, வடக்கு மற்றும் கிழக்கு மக்களிடமிருந்து, குடும்பத்துக்குத் தலா மூன்று சவரன் தங்கத்தைப் பெற்றனர். தனித் தமிழீழம் அமைந்த பின், அவரவர் தங்கத்தை, அவரவருக்கே திருப்பித் தருவோம் என்ற வாக்குறுதியின் அடிப்படையில், மக்களிடம் இருந்து வாங்கிய தங்கத்திற்கு ரசீதும் அளித்தனர்.ஆனால், போரின் முடிவில் அந்தத் தங்கத்தை, இலங்கை அரசு கைப்பற்றியது. இரு கன்டெய்னர்களில் அந்தத் தங்கம் கொண்டு செல்லப்பட்டது.
இந்தத் தங்கத்தை, உரிய குடும்பங்களிடம் இலங்கை அரசு ஒப்படைக்க வேண்டும்.கடந்த 1983ல் நிகழ்ந்த இனக்கலவரத்தின் போது, தங்கள் சொத்துக்களை இழந்த தமிழர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இரண்டு லட்சம் மக்கள் உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்துள்ளனர். அவர்களில் மிகச் சிறு பகுதியினரே மறுகுடியமர்த்தப்பட்டுள்ளனர். அப்பாவித் தமிழ் இளைஞர்கள் பலர், எவ்வித விசாரணையுமின்றி, விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
முன்பு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பணியாற்றி, தற்போது இலங்கை ராணுவத்திற்காகப் பணியாற்றும் சிலர், தங்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவதற்காகத் தந்த தவறான தகவல்களின் அடிப்படையில், அப்பாவிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.ஏற்கனவே அளித்த உறுதி மொழிகளின்படி, இலங்கை அதிபர் ராஜபக்ஷே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடுகளை அளிக்க வேண்டும்.இவ்வாறு ஆனந்த சங்கரி தெரிவித்தார்.