/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/வார்டின் வளர்ச்சிக்கு அயராது உழைப்பேன்வார்டின் வளர்ச்சிக்கு அயராது உழைப்பேன்
வார்டின் வளர்ச்சிக்கு அயராது உழைப்பேன்
வார்டின் வளர்ச்சிக்கு அயராது உழைப்பேன்
வார்டின் வளர்ச்சிக்கு அயராது உழைப்பேன்
ADDED : அக் 04, 2011 10:23 PM
காரைக்குடி:'நான் வெற்றி பெற்றால், வார்டின் வளர்ச்சிக்கு அயராது
உழைப்பேன்' என, காரைக்குடி நகராட்சி 9வது வார்டு தி.மு.க., வேட்பாளர்
லெ.வைரவன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: நகராட்சி துணைத்தலைவராக இந்த
எனக்கு வார்டு பிரச்னை குறித்து நன்றாக தெரியும்.
40 ஆண்டுகாலம் மண்
சாலையாக இந்த சுப்பிரமணியபுரம் உள்ளிட்ட எனது வார்டின் அனைத்து
பகுதிகளிலும் தார்சாலை, சிமென்ட் சாலையாக மாற்றியுள்ளேன். கம்பர்,
திரு.வி.க., நகர், வள்ளுவர் சாலை, சுப்பிரமணியபுரம் வடக்கு பிரிவு உட்பட பல
பகுதிகளில் தார் ரோடு அமைக்கப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளாக குடிநீர்
பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டு, தினமும் வழங்க ஏற்பாடு செய்தேன். ஐந்து
ஆண்டுகளில் யாரிடத்திலும், எதற்காகவும் கையூட்டு பெற்றதில்லை. வார்டு
பிரச்னை எதுவாக இருந்தாலும் முன் நின்று தீர்த்து வைக்க பாடுபடுவேன். நான்
கவுன்சிலராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டால், விடுபட்ட சுப்பிரமணியபுரம்
சாலைகள், வார்டிலுள்ள குறுகிய சந்துகள் தார்சாலையாக மாற்றுவேன்.'' என்றார்.


