/உள்ளூர் செய்திகள்/மதுரை/குறைகள் இல்லாத 51வது வார்டு வேட்பாளர் விஜயராகவன் உறுதிகுறைகள் இல்லாத 51வது வார்டு வேட்பாளர் விஜயராகவன் உறுதி
குறைகள் இல்லாத 51வது வார்டு வேட்பாளர் விஜயராகவன் உறுதி
குறைகள் இல்லாத 51வது வார்டு வேட்பாளர் விஜயராகவன் உறுதி
குறைகள் இல்லாத 51வது வார்டு வேட்பாளர் விஜயராகவன் உறுதி
ADDED : அக் 06, 2011 04:12 AM
மதுரை : மதுரை மாநகராட்சி 51வது வார்டு(இஸ்மாயில்புரம்) அ.தி.மு.க.,
செயலாளர் கே.விஜயராகவன், கவுன்சிலர் வேட்பாளராக களத்தில் நிற்கிறார்.
அவர்
கூறியதாவது :எனது தந்தை ஜி.கிருஷ்ணமூர்த்தி, ஏற்கனவே இந்த வார்டு செயலாளராக
இருந்தவர். அப்போதே இப்பகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கிடைக்க
காரணமாக இருந்தார். நான் கவுன்சிலரானால் குறைகள் இல்லாத வார்டாக மாற்றி
காட்டுவேன். ராமராயர் மண்டபம் - இஸ்மாயில்புரம் இடையே ஆற்றில் தரைப்பாலம்
கட்டப்படும். ஓலைப்பட்டிணம் உட்பட எங்கெங்கு 'பேவர் பிளாக்' கற்கள் மற்றும்
சிமென்ட் தளம் அமைக்கவில்லையோ அங்கெல்லாம் அமைத்து தருவேன்.அனைத்து
தெருக்களிலும் ஆழ்குழாய் அமைத்து தண்ணீர் கிடைக்கவும், சுகாதாரமான குடிநீர்
தடையின்றி கிடைக்கவும் நடவடிக்கை எடுப்பேன். சத்துணவு கூடத்தை, சுகாதாரமான
இடத்திற்கு மாற்றுவேன். முனிச்சாலை மகப்பேறு ஆஸ்பத்திரியில் ஜெனரேட்டர்
வசதி ஏற்படுத்துவதோடு, நவீன மருத்துவ வசதிகள்உடையதாக மாற்றுவேன்.
குறிப்பிட்ட இடங்களில் கழிப்பறை கட்டப்படும். ஆளுங்கட்சியை சேர்ந்தவன்
என்பதால், முதல்வர் ஜெயலலிதா அறிவிக்கும் அனைத்து நலத்திட்டங்களும்
மக்களுக்கு கிடைக்க வழிவகை செய்வேன், என்றார்.


