Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/குழந்தைகளுக்கு ஆன்மிக உணர்வை ஊட்ட வேண்டும்: அகஸ்தியர் பீடம் அடிகளார்

குழந்தைகளுக்கு ஆன்மிக உணர்வை ஊட்ட வேண்டும்: அகஸ்தியர் பீடம் அடிகளார்

குழந்தைகளுக்கு ஆன்மிக உணர்வை ஊட்ட வேண்டும்: அகஸ்தியர் பீடம் அடிகளார்

குழந்தைகளுக்கு ஆன்மிக உணர்வை ஊட்ட வேண்டும்: அகஸ்தியர் பீடம் அடிகளார்

ADDED : அக் 06, 2011 09:37 PM


Google News
சிறுமுகை : ''ஆன்மிக உணர்வை நாமும் பெற்று, நமது குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் ஊட்டி, பாரத நாட்டை பெருமைப் படச் செய்ய வேண்டுமென,'' அகஸ்தியர் ஞானபீடம் தங்கராஜ் அடிகளார் பேசினார்.

சிறுமுகையை அடுத்த ரேயான் நகரில் குடியிருப்போர் சங்கத்தின் சார்பில், வலம்புரி மங்கள விநாயகர் கோவிலில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. நிர்வாகக் குழு உறுப்பினர் சுப்புராஜ் தலைமை வகித்தார். கல்லாறு அகஸ்தியர் ஞானபீடம் தவத்திரு தங்கராஜ் அடிகளார் அருளாசி வழங்கி பேசியதாவது: முப்பெரும் தேவியருக்காக இந்த நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. தென்னாட்டில் நவராத்திரியாகவும், கர்நாடகாவில் தசராவாகவும், வடநாட்டில் துர்கா பூஜாவாகவும், அசுரர்களை வதம் செய்து தர்மத்தைக் காத்த வெற்றியை கொண்டாடப்படுவது தான், நவராத்திரி விழாவாகும். இந்த ஒன்பது நாட்களில், முதல் மூன்று நாட்கள் துர்க்கைக்கும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமிக்கும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதிக்கும் பண்டிகையாக கொண்டாடுகின்றனர். ஒரு மனிதன் நலமுடன் வாழ சக்தி தேவை; ஆகவே துர்க்கையை பூஜித்து அவள் அருளால் சக்தியைப் பெற வேண்டும். வளமுடன் வாழ ஐஸ்வர்யம் தேவை; எனவே லட்சுமிதேவி அருளை பெற மூன்று நாட்கள் பூஜை செய்ய வேண்டும். ஆன்மிக ஆற்றல் உணர்வை அறிய அறிவு வளம் வேண்டும். அதற்கு சரஸ்வதிக்கு கடைசி மூன்று நாள் பூஜை செய்து அருளைப் பெற வேண்டும். உலக அரங்கில் பண்பாட்டிலும், ஆன்மிகத்திலும், கலாசாரத்திலும் அன்று முதல் இன்று வரை, இந்திய நாடு சிறந்து விளங்குகிறது. எனவே, ஆன்மிக உணர்வை நாமும் பெற்று, நமது குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் ஊட்டி, பாரத நாட்டை பெருமைப் படச் செய்ய வேண்டும். இவ்வாறு, அடிகளார் பேசினார்.கோவில் நிர்வாகக் குழு தலைவர் மருதாசலம், குடியிருப்போர் நலச் சங்க முன்னாள் தலைவர் தண்டபாணி உள்பட பலர் பேசினர். நிர்வாகக்குழு உறுப்பினர் சம்பத் நன்றி கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us