சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராக ராஜா கோரிய மனு தள்ளுபடி
சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராக ராஜா கோரிய மனு தள்ளுபடி
சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராக ராஜா கோரிய மனு தள்ளுபடி
UPDATED : அக் 07, 2011 03:22 PM
ADDED : அக் 06, 2011 11:17 PM

புதுடில்லி: '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்த விசாரணையின்போது, சுப்ரீம் கோர்ட்டில் நேரில் ஆஜராக அனுமதி அளிக்கும்படி, டில்லி சிறப்பு கோர்ட்டில், தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ராஜா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
'2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கை, டில்லியில் உள்ள சி.பி.ஐ., கோர்ட் விசாரித்து வருகிறது. இந்த ஒட்டு மொத்த வழக்கு விசாரணையையும், சுப்ரீம் கோர்ட் கண்காணித்து வருகிறது.
இந்நிலையில், கடந்த வாரம் சிறப்பு கோர்ட்டில் ஆஜரான, ராஜாவின் வழக்கறிஞர்,'ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான விசாரணை முடிந்து விட்டதாக, சிறப்பு கோர்ட்டில் சி.பி.ஐ., தெரிவித்துள்ளது. ஆனால், சுப்ரீம் கோர்ட்டில், விசாரணை முடியவில்லை என, தெரிவித்துள்ளது. எனவே, விசாரணை முடிந்து விட்டதா, இல்லையா என்பதை, கோர்ட்டில் சி.பி.ஐ., தெளிவாக தெரிவிக்காத வரை, இந்த வழக்கு விசாரணை தொடர்பாக கோர்ட்டில் ஆஜராகப் போவது இல்லை'என, வாதாடினார். இந்நிலையில், தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ராஜா சார்பில், டில்லி சிறப்பு கோர்ட்டில், ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்,'ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான வழக்கை, சுப்ரீம் கோர்ட் கண்காணித்து வருகிறது.
வழக்கறிஞர்களால் விளக்க முடியாத சில விஷயங்களை, நானே கோர்ட்டில் ஆஜராகி விளக்க விரும்புகிறேன். எனவே, சுப்ரீம் கோர்ட்டில் நடக்கவுள்ள, இது தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராக விரும்புகிறேன். இதற்கு அனுமதி அளிக்க வேண்டும்'என, தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, இந்த மனு மீதான விசாரணை இன்று நடந்தது மனுனை சிறப்பு கோர்ட் நீதிபதி ஒ.பி.சைனி தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.


