/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/தாலுகா அளவிலான தடகள போட்டி: சர்க்கரை ஆலை மெட்ரிக் பள்ளி சாதனைதாலுகா அளவிலான தடகள போட்டி: சர்க்கரை ஆலை மெட்ரிக் பள்ளி சாதனை
தாலுகா அளவிலான தடகள போட்டி: சர்க்கரை ஆலை மெட்ரிக் பள்ளி சாதனை
தாலுகா அளவிலான தடகள போட்டி: சர்க்கரை ஆலை மெட்ரிக் பள்ளி சாதனை
தாலுகா அளவிலான தடகள போட்டி: சர்க்கரை ஆலை மெட்ரிக் பள்ளி சாதனை
ADDED : அக் 08, 2011 01:25 AM
மோகனூர்: தாலுகா அளவிலான தடகள மற்றும் குழு விளையாட்டு போட்டியில், மோகனூர்
சர்க்கரை ஆலை மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவியர், ஒட்டு மொத்த சாம்பியன்
பட்டத்தில் இரண்டாமிடம் பெற்று சாதனை படைத்தனர்.
மெட்ரிக் பள்ளிகளுக்கு
இடையே தாலுகா அளவிலான தடகள விளையாட்டு போட்டி, பாண்டமங்கலம்
ஆர்.என்.ஆக்ஸ்போர்டு மெட்ரிக் பள்ளியில் நடந்தது. போட்டியில், 20க்கும்
மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த, 400க்கும் அதிகமான மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
அதில், மோகனூர் சர்க்கரை ஆலை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர்
இளஞ்செழியன், மூத்தோர் பிரிவில், 100 மீ., ஓட்டப்பந்தயத்தில் இரண்டாமிடம்,
400 மீ., ஓட்டப்பந்தயத்தில் மாணவர் நவலடி இரண்டாமிடம், தட்டு எறியும்
போட்டியில் மாணவர் இளஞ்செழியன் மூன்றாமிடம், 100 மீ., ஓட்டப்பந்தயத்தில்
மாணவர் விஜய் மூன்றாமிடம், 200 மீ., ஓட்டப்பந்தயத்தில் மூன்றாமிடம்
பெற்றனர். அதேபோல், இளையோர் பிரிவில் மாணவி ஆன்ஸி, 100 மீ.,
ஓட்டப்பந்தயத்தில் மூன்றாமிடம், மாணவி நவீனா, 200 மீ., ஓட்டப்பந்தயத்தில்
மூன்றாமிடம், உயரம் தாண்டும் போட்டியில், மாணவி கஸ்தூரி இரண்டாமிடம், அனிதா
மூன்றாமிடம், 400 மீ., தொடர் ஓட்டப்பந்தயத்தில், மாணவியர் ஆன்ஸி, நவீனா,
அனிதா, காஷியா ஆகியோர் வெற்றி பெற்றனர். மூத்தோர் பிரிவில் உயரம் தாண்டும்
போட்டியில், மாணவி பிரியங்கா இரண்டாமிடம், 400 மீ., தொடர்
ஓட்டப்பந்தயத்தில், மாணவியர் பிரியங்கா, அக்ஷயா, இந்துமதி, திவ்யபாரதி
ஆகியோர் வெற்றி பெற்றனர். குழு போட்டியில், இப்பள்ளி 85 புள்ளிகளும், தடகள
விளையாட்டு போட்டியில், 17 புள்ளிகளும் என மொத்தம், 102 புள்ளிகள் பெற்று
ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தில், இரண்டாமிடம் பிடித்து சாதனை படைத்தனர்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை, பள்ளித் தாளாளர் அஜிதன், ஒருங்கிணைப்பாளர்
மணிமேகலை, முதல்வர் கரியபெட்டன், பிரைமரி தலைமையாசிரியர் பிரீத்தி,
உடற்பயிற்சி ஆசிரியர்கள் பார்வதி, ராஜேந்திரன், சந்திரசேகரன், பி.டி.ஏ.,
தலைவர் சக்திவேல் ஆகியோர் பாராட்டினர்.


