/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/உள்ளாட்சியிலும் வாய்ப்பு வழங்க கோரிக்கைஉள்ளாட்சியிலும் வாய்ப்பு வழங்க கோரிக்கை
உள்ளாட்சியிலும் வாய்ப்பு வழங்க கோரிக்கை
உள்ளாட்சியிலும் வாய்ப்பு வழங்க கோரிக்கை
உள்ளாட்சியிலும் வாய்ப்பு வழங்க கோரிக்கை
ADDED : அக் 08, 2011 10:58 PM
அவிநாசி : ''சட்டமன்ற தேர்தலில் வெற்றி அளித்ததை போல, உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றியை தர வேண்டும்,'' என அவிநாசி எம்.எல்.ஏ., கருப்பசாமி பேசினார்.திருமுருகன்பூண்டி பேரூராட்சி அ.தி.மு.க., வேட்பாளர் லதாவுக்கு, ஆதரவு கேட்டு, அவிநாசி எம்.எல்.ஏ., கருப்பசாமி நேற்று பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது எம்.எல்.ஏ., பேசியதாவது:கடந்த சட்டமன்ற தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு மக்கள் ஆதரவு தந்து, அமோக வெற்றியை அளித்தனர்.இன்று அ.தி.மு.க., அரசின் வளர்ச்சி திட்டங்கள் தொடரவும், அனைவருக்கும் அரசின் நலத்திட்டங்கள் தடையின்றி கிடைக்கவும், வாக்காளர்கள் சட்டசபை தேர்தலில் வழங்கிய அமோக ஆதரவை, உள்ளாட்சி தேர்தலிலும் வழங்க வேண்டும், என்றார்.


