ADDED : அக் 09, 2011 12:29 AM
புதுச்சேரி : இந்திரா நகர் தொகுதி இடைத் தேர்தலில், காங்., வேட்பாளர் ஆறுமுகத்தை ஆதரித்து நமச்சிவாயம் எம்.எல்.ஏ., பிரசாரம் செய்தார்.
தர்மாபுரி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்து, பிரசாரத்தை துவக்கிய நமச்சிவாயம், தர்மாபுரி, முத்தரையர் பாளையம் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று, ஓட்டு சேகரித்தார். அவருடன் மாநில காங்., செய்தித் தொடர்பாளர் வீரராகவன் மற்றும் நிர்வாகிகள் சென்றனர்.


