Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவாரூர்/திருவாரூர் மாவட்டத்தில் பூத் சிலிப் வழங்கல்

திருவாரூர் மாவட்டத்தில் பூத் சிலிப் வழங்கல்

திருவாரூர் மாவட்டத்தில் பூத் சிலிப் வழங்கல்

திருவாரூர் மாவட்டத்தில் பூத் சிலிப் வழங்கல்

ADDED : அக் 11, 2011 02:17 AM


Google News
திருவாரூர்: திருவாரூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான முனியநாதன் வெளியிட்ட அறிக்கை:ஒவ்வொரு வாக்காளர்களிடமும் நேரடியாக வாக்காளர்கள் இருப்பிடத்திற்கே சென்று தனித்தனியே கையொப்பம் பெற்றுக்கொண்டு பூத் சிலிப் வழங்கப்பட்டு வருகிறது.

நிரந்தரமாக வெளியூர் சென்றவர்கள், திருமணமாகி வசிப்பிடத்தை விட்டு கணவர் வீட்டிற்கு சென்ற மகளிர் மற்றும் இறந்தவர்களுக்கு அவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் பூத் சிலிப் வழங்கப்படமாட்டாது.வாக்காளர் துணைப்பட்டியலில் இடம்பெற்று, ஆனால், புகைப்படம் இல்லாத துணைப்பட்டியலில் இடம்பெற்று, ஆனால், புகைப்படம் இல்லாத வாக்காளர்களுக்கு கையால் எழுதப்பட்ட பூத் சிலிப்பு வழங்கப்படும். அரசு அலுவலர்கள் மட்டுமே பூத் சிலிப்புகளை வழங்குவார்கள்.ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அனைவருக்கும் சேர்த்து ஒருவரிடம் மொத்தமாக கொடுக்க இயலாது. எனவே, சம்பந்தப்பட்ட வாக்காளர்கள் தனித்தனியே நேரில் கையொப்பமிட்டு பெற்றுக்கொள்ள வேண்டும்.புகைப்படம் இல்லாத வாக்காளர்கள் தனித்தனியே நேரில் கையொப்பமிட்டு பெற்றுக்கொள்ள வேண்டும்.புகைப்படம் இல்லாத வாக்காளர் பூத் சிலிப் பெற்ற நபர்கள் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், வாகன ஓட்டுனர் உரிமம், வருமான வரி நிரந்தர கணக்குஎண் அட்டை, மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளூராட்சி அமைப்புகள் ஆகியவை வழங்கிய புகைப்படத்துடன் கூடிய பணியாளர் அடையாள அட்டை.பொதுத்துறை வங்கிகள் அல்லது அஞ்சலகம் ஆகியவை வழங்கிய புகைப்படத்துடன் கூடிய கணக்கு புத்தகம், புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய புத்தகம், முன்னாள் படைவீரரின் ஓய்வூதிய புத்தகம், முன்னாள் படைவீரரின் வாரிசுதாரர் சான்று, புகைப்படத்துடன் கூடிய முதியோர் ஓய்வூதிய ஆணை.புகைப்படத்துடன் கூடிய விதவை ஓய்வூதிய ஆணை, புகைப்படத்துடன் கூடிய சுதந்திர போராட்ட வீரர்களுக்கான அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய பட்டா மற்றும் புதிவு செய்யப்பட்ட சொத்து ஆவணங்கள், படைக்கல உரிமம், மாற்றுத்திறனாளிகளுக்கான புகைப்படத்துடன் அடையாள அட்டை.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை மற்றும் புகைப்படத்துடன் கூடிய அரசு மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை மற்றும் புகைப்படத்துடன் கூடிய அரசு மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை உட்பட 14 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம்.தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அலுவலர்கள் தங்களது வாக்குகளை அஞ்சல் வாக்குமூலம் செலுத்த வசதியாக படிவம் 15 சம்பந்தப்பட்ட தேர்த் நடத்தும் அலுவலகத்தில் உள்ளது.அதை பெற்று பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ள அஞ்சல் வாக்குச்சீட்டு பெட்டிகளில் வாக்கு எண்ணிக்கைக்கு முதல்நாளன்று மாலை ஐந்து மணிக்குள் செலுத்த வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us