/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ஆலங்குளம் அருகே பஸ் மோதி 20 ஆடுகள் பலிஆலங்குளம் அருகே பஸ் மோதி 20 ஆடுகள் பலி
ஆலங்குளம் அருகே பஸ் மோதி 20 ஆடுகள் பலி
ஆலங்குளம் அருகே பஸ் மோதி 20 ஆடுகள் பலி
ஆலங்குளம் அருகே பஸ் மோதி 20 ஆடுகள் பலி
ADDED : அக் 11, 2011 02:18 AM
ஆலங்குளம் : ஆலங்குளம் அருகே அரசு பஸ் மோதியதில் 20 ஆடுகள் பலியாயின.
நெல்லை அருகேயுள்ள தெற்குபட்டியை சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவருக்கு
சொந்தமான 250 ஆடுகளை குற்றாலத்தில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார்.
குற்றாலம் மலைப்பகுதி வறண்டு விட்டதால் அங்கிருந்த ஆடுகளை மானூர் பகுதிக்கு
மேய்ச்சலுக்காக கொண்டு சென்றனர். ஆடுகளை ஆலங்குளத்தை அடுத்த
கரும்புலியூத்து அருகே ஓட்டிச் சென்றபோது நெல்லையில் இருந்து தென்காசி வந்த
அரசு பஸ் எதிர்பாராதவிதமாக ஆடுகள் மீது மோதியது. இதில் 20 ஆடுகள் உடல்
நசுங்கி இறந்தன. இச்சம்பவம் குறித்து ஆலங்குளம் போலீசார் விசாரணை நடத்தி
வருகின்றனர்.


