/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/நெல்லையில் டிரைவர்கள் மீது தேர்தல் விதிமீறல் வழக்குநெல்லையில் டிரைவர்கள் மீது தேர்தல் விதிமீறல் வழக்கு
நெல்லையில் டிரைவர்கள் மீது தேர்தல் விதிமீறல் வழக்கு
நெல்லையில் டிரைவர்கள் மீது தேர்தல் விதிமீறல் வழக்கு
நெல்லையில் டிரைவர்கள் மீது தேர்தல் விதிமீறல் வழக்கு
ADDED : அக் 11, 2011 02:28 AM
திருநெல்வேலி : நெல்லையில் வாகன டிரைவர்கள் மீது போலீசார் தேர்தல் விதிமீறல் வழக்குப்பதிவு செய்தனர்.
கொக்கிரக்குளம் 8வது வார்டு அதிமுக கவுன்சிலராக இருப்பவர் கோமதிநாயகம்.
இவர் மீண்டும் அதே வார்டில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகிறார். இவர் பரிந்துரைப்படி கொக்கிரக்குளம் தாமிரபரணி ஆற்றங்கரையில் ஜே.சி.பி., இயந்திரம் மூலம் முட்புதர்களை வெட்டி அகற்றும் பணி நடந்தது. இதுகுறித்து பாளை. போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி ஜே.சி.பி., டிரைவர் காசிராஜன் மீது வழக்குப்பதிவு செய்தனர். தருவையை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் ராமன்(35). இவர் தன் ஆட்டோவில் தருவையில் பிரசாரம் செய்தார். அதற்குரிய ஆவணத்துடன் பாளை. க்கு இவர் வந்தார். அவர் மீது போலீசார் தேர்தல் விதிமீறல் வழக்குப்பதிவு செய்தனர். நெல்லை ஜங்ஷன் பகுதியில் சுயேட்சை வேட்பாளர் அனுமதி பெறாமல் அமைத்த தேர்தல் அலுவலகத்தை போலீசார் அகற்றினர்.


