/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பற்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்பற்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
பற்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
பற்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
பற்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
ADDED : அக் 12, 2011 12:54 AM
வில்லியனூர் : புதுச்சேரி அரசு நடமாடும் பல் பாதுகாப்பு மையம் சார்பில்
கஸ்தூரிபா மகளிர் கல்லூரியில் பற்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு சிறப்பு
முகாம் நடந்தது.
நாகவள்ளி வரவேற்றார். கல்லூரி முதல்வர் வசந்தகுமாரி தலைமை
தாங்கி முகாமை துவக்கி வைத்தார். நாட்டு நலப்பணி அலுவலர் சார்லஸ்
கிறிஸ்தோபர் ராஜ், சிறப்பு முகாமின் நோக்கத்தையும், முக்கிய அம்சங்களையும்
தன்னார்வலர்களுக்கு விளக்கி பேசினார். டாக்டர் சுப்ரமணியன் பங்கேற்று, வாய்
துர்நாற்றத்தினால் ஏற்படும் விளைவுகள், பாதுகாக்கும் முறை குறித்து
விளக்கம் அளித்தார். முகாமில் மாணவிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம்
அளிக்கப்பட்டது. மாணவி கவுசல்யா நன்றி கூறினார்.


