/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/வெறிச்சோடி காணப்படும் மாநகராட்சி; தேர்தல் பணியில் ஊழியர்கள் "பிஸி'வெறிச்சோடி காணப்படும் மாநகராட்சி; தேர்தல் பணியில் ஊழியர்கள் "பிஸி'
வெறிச்சோடி காணப்படும் மாநகராட்சி; தேர்தல் பணியில் ஊழியர்கள் "பிஸி'
வெறிச்சோடி காணப்படும் மாநகராட்சி; தேர்தல் பணியில் ஊழியர்கள் "பிஸி'
வெறிச்சோடி காணப்படும் மாநகராட்சி; தேர்தல் பணியில் ஊழியர்கள் "பிஸி'
ADDED : அக் 12, 2011 01:33 AM
ஈரோடு:ஈரோடு மாநகராட்சி நிர்வாகம் தேர்தல் பணியில் பிஸியாகி இருப்பதால்,
அலுவலகத்தின் பல பிரிவுகள் ஊழியர்களின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
ஈரோடு மாநகராட்சிக்கு அக்டோபர் 17ம் தேதி தேர்தல் நடக்கிறது. மேயர்
பதவிக்கு 18பேர், 60 வார்டு கவுன்சிலர் பதவிக்கு 488 வேட்பாளர்கள்
போட்டியிடுகின்றனர். தேர்தல் அறிவித்தது முதலே மாநகராட்சி அலுவலகம்
பரபரப்பானது.வேட்பாளர்களுக்கு வழங்க வாக்காளர் பட்டியல் தயாரிப்பு,
மனுத்தாக்கல், பரிசீலனை, இறுதி பட்டியல் வெளியீடு, தேர்தல் விதிகளை
கண்காணித்தல், விதிமீறிய செயல்களை தடுத்தல், ஓட்டுச்சாவடி மற்றும் ஓட்டு
எண்ணும் மையத்திற்கு தேவையான ஏற்பாடுகளை செய்தல் என மாநகராட்சி நிர்வாகம்
'பிஸி'யாக உள்ளது.மாநகராட்சித் தேர்தல் அதிகாரியாக கமிஷனரும், மண்டல உதவித்
தேர்தல் நடத்தும் அலுவலர்களாக மாநகராட்சி பொறியாளர், செயற்பொறியாளர்களும்
உள்ளனர். இவர்களுக்கு கீழ் பணிபுரியும் பெரும்பாலான அதிகாரிகள்,
ஊழியர்களுக்கும் ஏதாவது ஒரு தேர்தல் பணி வழங்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக
மாநகராட்சியில் மக்கள் சேவை தொடர்பான வழக்கமான பணிகள் ஏதும் நடக்கவில்லை.
தேர்தல் வேலையில் பெரும்பாலான ஊழியர்கள் ஈடுபட்டதால், அலுவலகத்தின்
கீழ்தளம், இரண்டாவது தளங்களில் உள்ள பிரிவுகளில் ஊழியர்கள் இன்றி,
இருக்கைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. பல ஊழியர்கள் தேர்தலை காரணமாக
வைத்து 'ஓபி'யும் அடித்து வருகின்றனர். மொத்தத்தில் மாநகராட்சியில் தேர்தல்
தொடர்பான பணிகளில் தான் ஊழியர்களை பார்க்க முடிகிறது.இதனால், அனைவருக்குமே
தேர்தல் பணிகள் உள்ளதா? அல்லது மற்றவர்கள் அலுவலகத்துக்கு வரவில்லையா?
அல்லது வந்துவிட்டு எங்காவது சொந்த வேலையை பார்க்க சென்றுவிடுகின்றனரா? என
சந்தேகம் எழுகிறது.


