/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மன்னீஸ்வரர் கோவிலில் ரூ. 2.40 லட்சத்தில் இடிதாங்கிமன்னீஸ்வரர் கோவிலில் ரூ. 2.40 லட்சத்தில் இடிதாங்கி
மன்னீஸ்வரர் கோவிலில் ரூ. 2.40 லட்சத்தில் இடிதாங்கி
மன்னீஸ்வரர் கோவிலில் ரூ. 2.40 லட்சத்தில் இடிதாங்கி
மன்னீஸ்வரர் கோவிலில் ரூ. 2.40 லட்சத்தில் இடிதாங்கி
ADDED : ஜூலை 19, 2011 09:25 PM
அன்னூர் : அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் 2.40 லட்சம் செலவில் இடிதாங்கி பொருத்தப்பட்டது.அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் ஆயிரம் ஆண்டு பழமையானது.
இக்கோவிலில் இறைவன் மேற்கு பார்த்து உள்ளதால், 'மேற்றலை தஞ்சாவூர்' என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோவிலில் மேற்கு வாசலில் 72 அடி உயரமுள்ள ராஜகோபுரம் உள்ளது. ராஜகோபுரத்தின் உச்சியில் 2.40 லட்சம் ரூபாய் செலவில் இடிதாங்கி நேற்று முன் தினம் பொருத்தப்பட்டது.
கோவில் அதிகாரிகள் கூறுகையில்,'மிகவும் நவீன வசதியுள்ள இடிதாங்கி இங்கு பொருத்தப்பட்டுள்ளது. கோபுரத்தின் அடித்தளத்தில் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. அருகில் உள்ள இடங்களில் இடி இறங்கினாலும் அதன் தன்மையை இதில் தெரிந்து கொள்ள முடியும்' என்றனர்.


