/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மகளிர் குழு ரேஷன் கடையில் முறைகேடு:பொதுமக்கள் ஆவேசம்மகளிர் குழு ரேஷன் கடையில் முறைகேடு:பொதுமக்கள் ஆவேசம்
மகளிர் குழு ரேஷன் கடையில் முறைகேடு:பொதுமக்கள் ஆவேசம்
மகளிர் குழு ரேஷன் கடையில் முறைகேடு:பொதுமக்கள் ஆவேசம்
மகளிர் குழு ரேஷன் கடையில் முறைகேடு:பொதுமக்கள் ஆவேசம்
ADDED : ஜூலை 26, 2011 09:42 PM
பொள்ளாச்சி : சூளேஸ்வரன்பட்டியில் மகளிர் சுயஉதவிக்குழு நடத்தும் ரேஷன் கடையில், வாங்காத பொருட்களுக்கு கார்டில் பதிவு செய்வதாக மக்கள் புகார் தெரிவித்தனர்.பொள்ளாச்சி அடுத்த சூளேஸ்வரன்பட்டி அம்பேத்கார் வீதி பொதுமக்கள் சார்பில் வருவாய் கோட்டாட்சியரிடம் கொடுத்த மனு:சூளேஸ்வரன்பட்டி அம்பேத்கார் வீதியிலுள்ள ரேஷன் கடையை எழிலோவியம் மகளிர் சுய உதவிக்குழுவினர் நிர்வாகம் செய்கின்றனர்.
அந்த ரேஷன் கடையில் 500க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகளுக்கு பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது.இங்குள்ள மக்கள் கல்வி அறிவு இல்லாதவர்கள் என்பதால், ரேஷன் கடைக்கு செல்லும் போது கடையின் விற்பனையாளர் வாங்காத பொருட்களுக்கும் பதிவு செய்து கொள்கிறார். இதுபற்றி குடிமைப்பொருள் வழங்கல் துறை தனித்தாசில்தார் அலுவலகத்தில் நேரடியாக புகார் செய்தோம்.அதனால் கடந்த 15ம் தேதி பொள்ளாச்சி தாசில்தாரிடம் புகார் செய்தோம். அதன்பின், கடந்த 20ம் தேதி மற்றொரு புகார்மனு கொடுக்கப்பட்டது. அப்போது தாசில்தார் அலுவலகத்தில் இருந்து கடையின் விற்பனையாளரிடம் போனில் விசாரணை செய்தார்கள்.அதன்பின், இதுவரை வாங்காத பொருளுக்கு பதிவு செய்ததை
விற்பனையாளர் ஒப்புக்கொண்டார். இனிமேல் அதுமாதிரி பதிவு செய்ய மாட்டார். ரேஷன் கார்டில் மறுபடியும் தவறாக பதிவு செய்தால் புகார் கொடுங்கள் என்று விற்பனையாளருக்கு சாதகமாக பதிலளித்தார்.மகளிர் சுய உதவிக்குழு நடத்தும் ரேஷன் கடையில் முறைகேடு நடப்பதை தடுக்க வேண்டும். முறைகேடுகளுக்கு உடந்தையாக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கொடுத்த புகார் மனுக்களின் நகல்களையும் வருவாய் கோட்டாட்சியரிடம் மக்கள் ஒப்படைத்தனர்.குறிப்பிட்ட ரேஷன் கடையில் விசாரணை செய்யவும், தவறுகளுக்கு உடந்தையாக செயல்படும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்படும் என்று வருவாய் கோட்டாட்சியர் அழகிரிசாமி தெரிவித்தார். இதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.