/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பட்டா கேட்டு குவிந்த குறவர் இன மக்கள்பட்டா கேட்டு குவிந்த குறவர் இன மக்கள்
பட்டா கேட்டு குவிந்த குறவர் இன மக்கள்
பட்டா கேட்டு குவிந்த குறவர் இன மக்கள்
பட்டா கேட்டு குவிந்த குறவர் இன மக்கள்
ADDED : ஆக 01, 2011 10:17 PM
திருப்பூர் : தேர்வு முடிவை வெளியிடக்கோரி பி.எட்., கல்லூரி மாணவர்களும், வீட்டுமனை பட்டா கேட்டு குறவர் இன மக்களும், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று தர்ணாவில் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் குறைகேட்பு முகாம், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் மதிவாணன் தலைமை வகித்து மனுக்களை பெற்றார். உதவி கலெக்டர் செல்வராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தனர். 350க்கும் மேற்பட்டோர் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனு அளித்தனர். தாராபுரம் மணக்கடவு பகுதியில் உள்ள கல்லூரியில், 2009-10ம் கல்வியாண்டில் பி.எட்., முடித்த 98 மாணவர்களுக்கு இதுவரை தேர்வு முடிவு வெளியிடவில்லை. கல்லூரி நிர்வாகத்தில் உள்ள பிரச்னை தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நடக்கிறது. இதனால் மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. ஆனால், அடுத்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது. ஓராண்டுக்கு மேலாகியும் முடிவுகள் வெளியிடப்படாமல், வேலை மற்றும் மேல்படிப்புக்கு செல்ல முடியாமலும், வேலைவாய்ப்பு பதிவில் முன்னுரிமை உள்ளிட்ட பல வகைகளில் பாதிக்கப்படுவதாக கூறி, அக்கல்லூரி மாணவ, மாணவியர் கலெக்டர் அலுவலகத்தில், கூட்ட அரங்கம் முன் தர்ணா போராட்டம் நடத்தினர். குறைகேட்பு நிகழ்ச்சியில் இருந்த கலெக்டர் வெளியே வந்து அவர்களிடம் பேசினார். கோர்ட்டில் வழக்கு உள்ளதால், மாணவர்கள் முறையாக கோர்ட்டை அணுகி, தங்கள் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்று அறிவுறுத்தினார். அதன் பின், அவர்கள் கலைந்து சென்றனர். இடம் கேட்டு குறவர் இனம் முற்றுகை: குன்னத்தூர், சந்தைப்பேட்டை கடலைக்காய் மைதா னம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. நரிக்குறவர், அருந்ததியர் இனத்தை சேர்ந்த ஊசி, பாசி வியாபாரிகள் மற்றும் கூலித்தொழிலாளிகள், 40 ஆண்டுகளாக அங்கு வசிக்கின்றனர். அவர்களுக்கு அம்முகவரியில் ரேஷன் கார்டு, ஓட்டுரிமை உள்ளன. இக்குடும்பங்கள் வசிக்கும் இடத்தை காலி செய்ய வேண்டும் என ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம் சார்பில் சில மாதங்களுக்கு முன் நோட்டீஸ் வழங்கப்பட்டது. கோரிக்கையை ஏற்று, மாற்று இடம் வழங்கியதும் இடத்தை காலி செய்ய அறிவுறுத்தப்பட்டது. ஆனால், இதுவரை மாற்று இடம் வழங்கப்படவில்லை; திடீரென மீண்டும் இடத்தை காலி செய்ய வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அங்கு வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தங்களுக்கு மாற்றிடம் வழங்கும் வரை, தற்போது குடியிருக்கும் இடத்தை விட்டு வெளியேற்றக் கூடாது என கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்த மனுவை கலெக்டரிடம் அளித்தனர். ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி, வீதிக்காடு பகுதியில் சாக்கடை கால்வாய் கட்டப்பட்டது. எட்டு அடி ஆழத்தில் கட்டப்பட்டதால், கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதை முறைப்படுத்த வேண்டும் என்று மனு அளிக்கப்பட்டது. அனுப்பட்டி பகுதியில் தனி யார் பஸ்களில் பஸ் கட்டணம் அதிகமாக வசூலிப் பதாக கூறி, அப்பகுதியினர் சாலை மறியல், பஸ் சிறைபிடிப்பு என போராடினர். தொடர்ந்தும் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக கலெக்டரி டம் பொதுமக்கள் மனு அளித்தனர். 'திருப்பூரில் உள்ள சினிமா தியேட்டர்களில் ரிசர்வேஷன் டிக்கெட்டில் கட்டணம் அச்சடிப்பதில்லை. இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கின்றனர். வருமான வரித்துறையினரும் ஆய்வு செய்வதில்லை. ஊழியர்களுக்கு ஆறு மாதங்களுக்கு மேல் வேலை தருவதில்லை. டிக்கெட்களில் அரசு முத்திரை இருப்ப தில்லை,' என்று தியேட்டர் ஊழியர் சங்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. 'திருப்பூர் மாநகராட்சி 16வது வார்டில், ஏழு சென்ட் ரிசர்வ் சைட் உள்ளது. தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள அந்த இடத்தை மீட்டு, பயன்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்த பின், கடந்த 2008ல், மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், எந்த நடவடிக்கையும் இதுவரை இல்லை.
மேலும், கொங்கு மெயின் ரோடு, டி.எஸ்.ஆர்., லே-அவுட் பகுதிகளில் உள்ள இரண்டு மதுக்கடைகள், குடியிருப்பு, பள்ளி மற்றும் கோவில் உள்ளிட்ட வழிபாட்டு ஸ்தலங்கள் அமைந்துள்ள பகுதியில் உள்ளன. அவற்றை இட மாற்றம் செய்ய வேண்டும்,' என, வார்டு கவுன்சிலர் ராஜேந்திரன் மனு அளித்தார். 'வேலம்பாளையம் நகராட்சி காவிலிபாளையத்தில் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட பொதுக்கழிப்பிடம் பயன்படுத்தப்படாமல் உள்ளது. ஊரில் உள்ள மேல்நிலைத்தொட்டி சேதம் அடைந்துள்ளது. சாக்கடை கால்வாய் கட்டி முடிக்கப்படாமல் உள்ளது. இப்பகுதிக்கு பஸ் வசதி வேண்டும்,' என, தே.மு.தி.க., வினர் மனு அளித்தனர்.
முறியாண்டாம்பாளையம் ஊராட்சி பெரியகாட்டுப்பாளையம் மக்கள் அளித்த மனுவில், 'தங்கள் ஊருக்கு முறையான ரோடு, தெருவிளக்கு உள்ளிட்ட எந்த வசதியும் இல்லை. மோசமான ரோட்டால் மினி பஸ் கூட வருவதில்லை. 25 ஆண்டுகளாக 200 குடும்பங்கள் பெரும் சிரமத்தில் வசிக்கின்றன,' என கூறியுள்ளனர். தாராபுரம், நந்தவனப்பாளையம் ஒன்பதாவது மடை பி.ஏ.பி., பாசன விவசாயிகள் அளித்த மனுவில், 'வாய்க்கால் மடையை மறித்து முள்வேலி அமைத்துள்ளனர்; வாய்க்கால் புறம்போக்கு பகுதியில் வண்டி மற்றும் கால்நடைகள் செல்ல முடியவில்லை; பொதுப்பணித்துறை வாய்க்கால் ஆக்கிரமிப்பை மீட்க வேண்டும்,' என்று கூறியுள்ளனர்.