/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/கிராமங்களை தேடி அதிகாரிகள் வரும் போது மக்கள் அதனை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்கிராமங்களை தேடி அதிகாரிகள் வரும் போது மக்கள் அதனை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
கிராமங்களை தேடி அதிகாரிகள் வரும் போது மக்கள் அதனை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
கிராமங்களை தேடி அதிகாரிகள் வரும் போது மக்கள் அதனை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
கிராமங்களை தேடி அதிகாரிகள் வரும் போது மக்கள் அதனை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
தூத்துக்குடி : கிராமங்களை தேடி அதிகாரிகள் வருவதால் மக்கள் இதனை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் மனுநீதிநாளில் கோரிக்கை அனைத்தையும் தெரிவிக்க வேண்டும் என்று கலெக்டர் ஆஷீஷ்குமார் தெரிவித்தார்.
கூட்டத்தில் கலெக்டர் ஆஷீஷ்குமார் பேசியதாவது; பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அவர்களது கோரிக்கை மனுக்களை அவர்கள் வசிக்கும் இடத்திற்கே வந்து நேரடியாக பெற்று அதன் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண்பதற்கு தான் இதுபோன்ற மனுநீதிநாள் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமை மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி கொண்டு தங்கள் ஊருக்கு தேவையான கோரிக்கை, அடிப்படை வசதிகள் சம்பந்தமாக மனு அளித்து அதற்கான தீர்வினை கண்டு கொள்ளலாம். இது தவிர தனிப்பட்ட முறையில் பட்டா மாற்றம், ரேஷன் கார்டு விண்ணப்பித்தல் உள்ளிட்ட பணிகளையும் இதன் மூலம் செய்து கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் பேசினார். முகாமில் சமூகபாதுகாப்பு திட்டத்தின் கீழ் திருமண உதவித் தொகையாக இரண்டு நபர்களுக்கு 8 ஆயிரம் மற்றும் விதவை உதவித் தொகை, மாற்றுதிறனாளிகள் உதவித் தொகை, கணவரால் கைவிடப்பட்டோருக்கான உதவித்தொகை 24 நபர்களுக்கு கலெக்டர் வழங்கினார்.
நான்கு பேருக்கு ரேஷன் கார்டு, முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவி 15 நபர்களுக்கு 6 ஆயிரம் வீதம் 90 ஆயிரம், வேளாண்மைத்துறை சார்பில் உதவிகள் போன்றவற்றை கலெக்டர் வழங்கினார். விழாவில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பாரதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளிக்குரிய லேப்டாப்பில் ரத்தத்தின் பகுதி பொருட்கள், தாவர செல் அமைப்பு போன்றவற்றை லேப்டாப்பில் கலர்படம் மூலம் வரைந்து காட்டினார். அரசு பள்ளி மாணவர்களின் கம்ப்யூட்டர் வளர்ச்சியை கண்டு கலெக்டர் பாராட்டு தெரிவித்தார். சுகாதாரத்துறை சார்பில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் பல்வேறு மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது. வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் உள்ளிட்டவை சார்பில் கண்காட்சியும் முகாமை ஒட்டி நடத்தப்பட்டது. நிகழ்ச்சிகளை பி.ஆர்.ஓ., சுரேஷ் தொகுத்து வழங்கினார். தூத்துக்குடி தாசில்தார் கலியுகவரதன் நன்றி கூறினார்.


