ADDED : செப் 03, 2011 02:44 AM
திருநெல்வேலி:சேரன்மகாதேவியில் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்
நடந்தது.சேரன்மகாதேவி வட்டாரத்தில் அட்மா திட்டத்தின் கீழ் திருந்திய நெல்
சாகுபடியில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு, ஊட்டச்சத்து நிர்வாகம்
குறித்து ஆறு பயிற்சி வகுப்புகள் நடக்கவுள்ளது.
முதற்கட்ட பயிற்சி வகுப்பு
சேரன்மகாதேவி முருகன் வயலில் நடந்தது.மாவட்ட உழவர் பயிற்சி நிலைய துணை
வேளாண்மை இயக்குனர் அழகிரிசாமி பயிற்சி அளித்தார். வேளாண்மை உதவி இயக்குனர்
ஜெயசெல்வின் இன்பராஜ், வேளாண்மை அலுவலர் பரமசிவன், துணை வேளாண்மை அலுவலர்
நாகூர்மீரான், அமிர்தா அக்ரி கிளினிக் நிறுவனர் சங்கரநாராயணன், விவசாயிகள்
கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர்கள் சேவியர், செல்வி
செய்திருந்தனர்.


