/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/தரம் உயர்த்தப்பட்ட பள்ளி துவக்கவிழாதரம் உயர்த்தப்பட்ட பள்ளி துவக்கவிழா
தரம் உயர்த்தப்பட்ட பள்ளி துவக்கவிழா
தரம் உயர்த்தப்பட்ட பள்ளி துவக்கவிழா
தரம் உயர்த்தப்பட்ட பள்ளி துவக்கவிழா
ADDED : செப் 04, 2011 09:42 PM
நத்தம்:சேத்தூர் ஊராட்சி பெரிய அரவங்குறிச்சியில் உயர் நிலைப்பள்ளியை
மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தியதற்கான துவக்க விழா
நடந்தது.ஊராட்சித்தலைவர் சுப்பிரமணி வரவேற்றார். ஆர்.டி.ஓ., பெருமாள்,
மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலர் அசோகன் முன்னிலை வகித்தனர். தாசில்தார்
வரதராஜன், டாக்டர். அப்துல் லத்தீப், லிங்கவாடி தலைவர் உத்தமன்,
தலைமையாசிரியர் பாண்டிச்செல்வி, உதவித்தலைமையாசிரியர் தங்க வேல், பெற்றோர்
ஆசிரியர் சங்கதலைவர் ராஜேந்திரன், உழவர் மன்ற தலைவர் சொக்கலிங்கம் பலர்
கலந்துகொண்டனர். அமைச்சர் விசுவநாதன் பேசியதாவது: கிராமப்புற பள்ளியில்
படித்தவர்கள் கடினமாக உழைத்து ஐ.ஏ.எஸ்., டாக்டர் என வந்துள்ளனர்.
அவர்களைப்போலவே நீங்களும்வரவேண்டும். இந்த அரசு கல்விக்கு இதுவரை எந்த
அரசும் கொடுக்காத முக்கியத்துவத்தை கொடுத்துள்ளது.
கல்விக்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளார் முதல்வர். மூன்று
மாதத்திற்குள் 52 ஆயிரம் ஆசிரியர்களை நியமிப்பதற்கான உத்தரவிடப்பட்டுள்ளது,
என்றார்.
மாவட்ட கல்வி அலுவலர் காதர் சுல்தான் நன்றி கூறினார்.


