Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/‌குணமடைந்தார் சோனியா: நாடு திரும்புவது எப்போது?

‌குணமடைந்தார் சோனியா: நாடு திரும்புவது எப்போது?

‌குணமடைந்தார் சோனியா: நாடு திரும்புவது எப்போது?

‌குணமடைந்தார் சோனியா: நாடு திரும்புவது எப்போது?

UPDATED : செப் 06, 2011 10:06 AMADDED : செப் 06, 2011 10:03 AM


Google News
புதுடில்லி: கடந்த ஒரு மாத காலமாக அமெரிக்காவின் சிகிச்சை பெற்று வரும் காங்கிரஸ் தலைவர் சோனியா, 64 இந்த வாரத்திற்குள் அல்லது இன்று இரவு நாடு திரும்ப முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உடல்நலக்குறைவால் அவதியுற்ற காங்கிரஸ் தலைவர் சோனியா கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதியன்று அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். அதுவரை காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்புகளை, ராகுல், அகமதுபடேல் உள்ளிட்டோரிடம் ஒப்படைத்தார். தற்போது சோனியா குணமடைந்துவிட்டதாக, கடந்த ஞாயிறன்று டில்லி திரும்பிய ராகுல் கூறினார். இதைத்தொடர்ந்து இந்த வாரத்திற்குள் அல்லது இன்று இரவோ ,சோனியா இந்தியா திரும்ப முடிவு செய்துள்ளதாக டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் சிகிச்சை பெற்று வரும் சோனியாவை அருகிலிருந்து கவனித்துவரும் அவரது மகள் பிரியங்‌கா வதோராவும் இந்த தகவலை ‌உறுதி செய்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us